பூர்ணாத்திரேயசர் கோயில்
கேரளக் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஸ்ரீ பூர்ணாத்திரேயசர் கோயில் (Sree Poornathrayeesa Temple, மலையாளத்தில்: ശ്രീ പൂര്ണ്ണത്രയീശ ക്ഷേത്രം) என்பது கேரளத்தின், கொச்சி, திருப்பூணித்துறையில் அமைந்துள்ள ஒரு விஷ்ணு கோயில் ஆகும். கொச்சி இராச்சிய அரச குடும்பத்தின் 8 அரச கோவில்களில் இது முதன்மையானது. இந்தக் கோயில் கேரளத்தின் மிகப் பெரிய கோயில்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த தெய்வம் கொச்சினின் தேசிய தெய்வமாகவும், திருப்பூத்துறையின் காவல் தெய்வமாகவும் கருதப்பட்டது. எனவே இந்தக் கோயிலில் நடக்கும் விருச்சிகோத்சவ விழாவில் 40 க்கும் மேற்பட்ட யானைகள் கலந்துகொள்கின்றன. பூர்ணசந்திர ஈசர் யானைகளை விரும்புபவராக கருதப்படுவதால், யானைகளின் உரிமையாளர்கள் பலர் பணத்தை எதிர்பார்க்காமல் யானைகளை உறசவத்திற்கு அனுப்புகின்றனர்.
இந்த கோயில் ஆண்டுதோறும் நடக்கும் உற்வங்கள் அல்லது பண்டிகைகளுக்கும் பிரபலமானது. கோயில் விழாவானது ஒவ்வொரு ஆண்டும் விருச்சிகம் மாதத்தில் (நவம்பர்-திசம்பர்) விருச்சிகோற்சவம் என்ற பெயரில் நடத்தபடுகிறது.[1] மேலும் இந்த விருச்சிகோற்சவம் விழாவானது உலகின் மிகப் பெரிய கோயில் திருவிழாவாகும். இக்கோயில் இறைவன் "சந்தனா கோபால மூர்த்தி" வடிவத்தில் உள்ள மகா விஷ்ணு என்பதால், குழந்தையில்லாதவர்கள் குழந்தை வரம்வேண்டி இங்கு வழிபட வருதல் வழக்கமாக உள்ளது.
Remove ads
மேலும் காண்க
படக்காட்சியகம்
- கோயில் தூண்களில் கலை வேலைப்பாடு
- கோயில் விழா
- கோயிலின் பின்புறம்
- கோயில் முன் விளக்குமரம்
- திருவிழாவின் போது யானைகளின் அணிவகுப்பு
- திருவிழாவின் போது யானைகளின் அணிவகுப்பு
- திருவிழாவின் போது யானைகளின் அணிவகுப்பு
- திருவிழாவின் போது யானைகளின் அணிவகுப்பு
- திருவிழாவின் போது யானைகளின் அணிவகுப்பு
- திருவிழாவின் போது யானைகளின் அணிவகுப்பு
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads