கேரள கலாச்சாரத்தில் யானைகள்

From Wikipedia, the free encyclopedia

கேரள கலாச்சாரத்தில் யானைகள்
Remove ads

இந்த கட்டுரை தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தின் கலாச்சாரத்தில் யானைகளின் பங்கை (இந்திய யானை, எலிபாஸ் மாக்சிமஸ் இண்டிகஸ்) உள்ளடக்கியது.

Thumb
மூணாரில் காட்டு யானைகள்

கேரளாவில் காணப்படும் யானைகள், இந்திய யானைகள், ஆசிய யானையின் அங்கீகரிக்கப்பட்ட மூன்று கிளையினங்களில் ஒன்றாகும். 1986 முதல், ஆசிய யானைகள் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தால் பட்டியலிடப்பட்டுள்ளது. ஏனெனில் கடந்த மூன்று தலைமுறைகளில் இதன் இனப்பெருக்கம் குறைந்தது 50% குறைந்துள்ளது. இது காடுகளில் 25,600 முதல் 32,750 வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. வாழ்விடம் இழப்பு, சீரழிவு மற்றும் துண்டு துண்டாக இந்த இனங்கள் முதன்மையாக அச்சுறுத்தப்படுகின்றன. காட்டு யானைகளின் பெரிய மக்கள்தொகையுடன், கேரளாவில் எழுநூற்றுக்கும் மேற்பட்ட வளர்ப்பு யானைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை கோயில்களுக்கும் தனிநபர்களுக்கும் சொந்தமானவை. அவை கோயில்களிலும் அதைச் சுற்றியுள்ள மத விழாக்களுக்கும், சில தேவாலயங்கள் மற்றும் மசூதிகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் ஒரு சில யானைகள் மரம் வெட்டும் இடங்களில் வேலை செய்கின்றன. கேரளாவில் உள்ள யானைகள் பெரும்பாலும் "மேற்குத்தொடர்ச்சி மலைகளின் மகன்கள்" என்று அழைக்கப்படுகின்றன (வைலோப்பள்ளி சிறீதர மேனனின் கவிதை சகாயன்டே மாக்கன்). மாநில விலங்காக, யானை கேரள மாநில அரசின் சின்னத்தில் இடம்பெற்றுள்ளது. இது திருவிதாங்கூர் மற்றும் கொச்சி இரண்டின் அரச சின்னத்திலிருந்து எடுக்கப்பட்டது.[1][2] வனப்பகுதிகளில் பிடிக்கப்பட்ட, வளர்க்கப்பட்ட யானை ஒருபோதும் மற்ற காட்டு யானைகளால் ஏற்றுக்கொள்ளப்படாது என்று நம்பப்படுகிறது.

Remove ads

பண்டிகைகளில் யானைகள்

Thumb
தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தில் திரிச்சூர் பூரம் திருவிழாவின் போது யானைகள் இடம் பெறுகின்றன.

கேரளாவின் பல முக்கிய கோயில்களில் யானைகள் இடம்பெறுகின்றன. அவற்றில் பல யானைகள் பக்தர்களால் தானம் செய்யப்பட்டவையாகும்.[3] 60க்கும் மேற்பட்ட யானைகளைக் கொண்ட புகழ்பெற்ற குருவாயூர் கோயிலில் யானைகள் சடங்கு வழிபாட்டின் முக்கிய பகுதியாகும். உலகின் ஒரே யானை அரண்மனை, குருவாயூர் கோயிலிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள புன்னத்தூர் கோட்டை ஆகும். இது கோயிலின் யானைகளை வைக்க கட்டப்பட்டுள்ளது. குருவாயூர் கேசவன் என்ற பிரபல யானை இந்த கோவிலைச் சேர்ந்தது.

கிட்டத்தட்ட அனைத்து கேரளாவில் உள்ளூர் பண்டிகைகளிலும் குறைந்தது ஒரு அலங்கரிக்கப்பபட்ட யானையாவது இடம்பெறும். இந்து கோவில்களில் வருடாந்த திருவிழா ஊர்வலங்கள் மற்றும் உற்சவத்தின் போது யானைகள் தெய்வத்தை சுமக்கின்றன. கோயில் யானைகள் தங்கமுலாம் பூசப்பட்ட நெட்டிப்பட்டம், மணிகள் மற்றும் கழுத்தணிகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். யானைகளில் ஏற்றப்பட்ட மக்கள் அலங்கரிக்கப்பட்ட பட்டு முத்துக்குடாவை உயரமாக உயர்த்தி, வெஞ்சாமரம் மற்றும் மயில் இறகு விசிறிகள் ("ஆலவட்டம்") ஆகியவற்றை இசைக்குழுவின் தாளத்திற்கு இழுக்கின்றனர்.[4] கூடல்மாணிக்கம் கோயில் கோயிலில் பஞ்சரி மேளத்தை நிறைவேற்ற தினசரி உற்சவ சுற்றுகளுக்கு பதினேழு யானைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த ஏழு யானைகளின் தலைக்கவசம் தூய தங்கத்தாலும் மீதமுள்ள பகுதி தூய வெள்ளியாலும் ஆனது. இது இந்த கோவிலுக்கு தனித்துவமானது.  திருப்பூணித்துறை பூரணநாதயீசன் கோயில் விருச்சிக உற்சவத்தில் 15 யானைகள் சீவேலியால் அலங்காரம் செய்யப்படுகின்றன. இது உலகின் மிகப்பெரிய கோயில் திருவிழாவாகும். பகவான் பூரணநாதயீசனைச் சுமக்கும் யானை சுவர்ணா தலெக்கெட்டால் (மன்னர்களின் கருவூலத்திலிருந்து பெறப்படும் தூய தங்கத்தால் செய்யப்பட்ட நெட்டிப்பட்டம்) அலங்கரிக்கப்படும்.

Thumb
யானைப் பாகனும், யானையும் குருவாயூர், திருச்சூர், கேரளா
Thumb
ஒரு ஆசிய யானை, குருவாயூர், திருச்சூர், கேரளம்
Remove ads

கேரள வரலாற்றிலும் புராணங்களிலும் யானைகள்

Thumb
சிறீ பூரணநாதயீசன் கோயில் திருவிழாவின் போது அலங்கரிக்கப்பட்ட யானைகள்.

கேரளாவின் உள்ளூர் புராணங்களில் பல யானைகள் இடம்பெற்றுள்ளன. கொட்டாரத்தில் சங்குண்ணி எட்டு தொகுதிகளில் எழுதப்பட்ட ஐதீகமாலா ("வரலாற்று நிகழ்வுகளின் ஒரு மாலை") என்ற நூலில் ஒவ்வொரு தொகுதியும் ஒரு பிரபலமான யானையைப் பற்றிய கதை அல்லது புராணக்கதையுடன் முடிவடைகிறது. .

யானைகளைப் பராமரித்தல்

ஒவ்வொரு யானைக்கும் மலையாள மொழியில் பாப்பன் (പാപ്പാൻ ) என்று அழைக்கப்படும் மூன்று யானைப் பாகன்கள் உள்ளனர். யானையை சிறிய கற்கள் மற்றும் தேங்காய்களின் நார்கள் ஆகியவற்றைக் கொண்டு உடலைத் தேய்த்து குளிக்க வைப்பதும், பாகன்களின் மிக முக்கியமான கடமையாகும் மழைக்காலத்தில், யானைகள் ஆயுர்வேத புத்துணர்ச்சி சிகிச்சைகளுக்கு உட்படுகின்றன. இதில் மூலிகைகள் சாறுகள் கொண்ட தண்ணீர் போன்றவை அடங்கும். இது மலையாள மொழியில் "சுக சிகிச்சா" என்று அழைக்கப்படுகிறது. மாவுத்தன் என்று சமஸ்கிருத மொழியில் அழைக்கப்படும் பாகன்களை மூன்று வகைகளாக வகைப்படுத்தலாம்

  • ரெகவான் : யானைகளைக் கட்டுப்படுத்த அன்பைப் பயன்படுத்துபவர்கள்.
  • யுக்திமான் : யானைகளை மிஞ்சும் புத்தி கூர்மையை பயன்படுத்துபவர்கள்.
  • பல்வான் : யானைகளை அவரது உரத்த குரலால் கட்டுப்படுத்துபவர்கள்

நவம்பர் 2014 இல், இந்திரஜித் என்ற யானை வனப்பகுதிக்கு விடுவிக்கப்பட்ட சம்பவத்தை மாத்ருபூமி அறிவித்தது. யானையின் உரிமையாளர் திரு டி. ஆர். ரகுலால் (எலைட் குழுமங்களின் நிர்வாக இயக்குநர்) என்பவர் யானையின் மீது கொண்ட அக்கறை மற்றும் பாசத்தின் காரணமாக (நிதிக் கட்டுப்பாடுகள் காரணமாக அல்ல) இது நடந்தது. வனப்பகுதியில் ஒரு யானை எதிர்கொள்ளும் தொல்லைகளைத் தவிர்ப்பதற்காக, கேரள அரசின் வன-வனவிலங்கு துறைகளால், சுமுகமான மாற்றத்தை உறுதி செய்ய சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.[5] இந்த யானைக்கு 15 வயது, மேலும் இது 50 ஆண்டுகள் வாழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேரளா போன்ற மாநிலத்தில் யானைகளுக்கு மிகப்பெரிய சந்தை மதிப்பு உள்ளது.[6]

யானைகளுக்கு எதிரான கொடுமை

சுமார் 700 யானைகள் மக்கள் மற்றும் கோயில்களுக்கு சொந்தமானவை. இந்த யானைகள் 10,000 க்கும் மேற்பட்ட திருவிழாக்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு வாடகைக்கு விடப்படுகின்றன. இதில் ஒரு யானை அவைகளின் நிலைக்கு ஏற்ப ஒரு நாளைக்கு 5000 டாலர் வரை வருவாய் ஈட்டக்கூடும்.[7] இந்த விலங்குகள் நீண்ட மற்றும் சத்தமான ஊர்வலங்களை சகித்துக்கொள்ள வேண்டும். உரத்த பட்டாசுகள், தீப்பிழம்புகளுக்கு அருகில் நிற்க வேண்டும். திறந்தவெளி வாகனங்களில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். எரிச்சலூட்டும் வெயிலில் தார் சாலைகளில் மணிக்கணக்கில் நடக்க வேண்டும். மதம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டினை காரணம் காட்டி சில சமயங்களில் உணவு, தண்ணீர் மற்றும் தூக்கம் கூட மறுக்கப்படுகின்றன.[8] அவைகள் பெரும்பாலும் பாகன்களின் குடிபோதையால் மிருகத்தனமாக துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றன. சுமார் பாதியளவு பாகன்களில் குடிப்பழக்கம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்கள் பல்வேறு வருடாந்திர பண்டிகைகளைக் கொண்டாடும் போது கேரளாவில் சிறைபிடிக்கப்பட்ட யானைகளுக்கு ஜனவரி முதல் ஏப்ரல் வரை மிக மோசமான மாதங்களாக உள்ளன.

Remove ads

சிறை மீட்கப்பட்ட யானைகள்

கேரளாவில் சிறை மீட்கப்பட்ட குறிப்பிடத்தக்க யானைகளில் செங்கல்லூர் தாட்சாயணி, பம்படி இராசன், தெச்சிக்கோட்டுகாவு ராமச்சந்திரன், சிரக்கல் காளிதாசன், திரிக்கடவூர் சிவராஜு, கொங்காடு குட்டிசங்கரன், பரமேக்காவு பரமேஸ்வரன் (இறந்து விட்டது), திருவம்பாடி சந்திரசேகரன் (அதே பெயரில் இரண்டு யானைகள்) புதுப்பிள்ளி கேசவன், மங்கலம்குன்னு கர்ணன், கந்தம்புல்லி பாலநாராயணன் (இறந்து விட்டது) மற்றும் குருவாயூர் கேசவன் (இறந்து விட்டது ), கோட்டூர் சோமன் போன்றவை அடங்கும்.

Remove ads

யானைகளுக்கு பயன்படுத்தப்படும் ஆபரணங்கள்

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்திலுள்ள பிரபலமான குடும்பங்களில் ஒன்றான வெங்கிடாத்ரி குடும்பம் மூன்று தலைமுறைகளாக ஆபரணங்களை உருவாக்கியுள்ளது. குறிப்பாக இந்து கோவிலை மையமாகக் கொண்ட திருவிழாக்களில் மிகவும் பிரபலமான புகழ்பெற்ற திருச்சூர் பூரம் போன்றவை. அவர்கள் தங்கமுலாம் பூசப்பட்ட அலங்காரங்கள், குடைகள், ஆலவட்டம், வெஞ்சாமரம், மற்றும் கழுத்தணிகளை உருவாக்குகிறார்கள். ஆலய விழாக்களுக்கு நூற்று ஐம்பது யானைகளை ஆபரணங்களால் அலங்கரிக்கின்றனர். திருச்சூர் பூரம், நென்மாரா வல்லங்கி வேலா ஆகியவை கேரளாவில் புகழ்பெற்ற சில பண்டிகைகளாகும், இதில் அலங்கரிக்கப்பட்ட யானைகள் ஊர்வலத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன. முக்கிய சாமரம் விற்பனையாளர்கள் பரமேக்காவ் தேவோசம், வெங்கிடாத்ரி, மரமிட்டாத்து பாலச்சந்திரன் (பாலன் மாஷு) ஆவர்.

Remove ads

கேரளாவில் யானைகளைக் கட்டுப்படுத்துதல்

இந்தியாவில், குறிப்பாக கேரளாவில், யானைகளைக் கட்டுப்படுத்த பாகன்கள் மூன்று வகையான குச்சிகளைப் பயன்படுத்துகிறார்.

கேரளாவில் யானை ஆய்வு

உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, கேரள வன மற்றும் வனவிலங்குத் துறை 2018 நவம்பரில் கேரளாவில் மாநிலம் தழுவிய யானைத் தொகை கணக்கெடுப்பை நடத்தியது. இந்த கணக்கெடுப்பில் 520க்கும் மேற்பட்ட யானைகள் கணக்கெடுக்கப்பட்டன. திருச்சூரில் அதிக யானைகள் பதிவாகியுள்ளன (145), கண்ணூரில் மிகக் குறைந்த யானைகள் உள்ளன (3). காசர்கோடு பகுதியில் யானைகள் இல்லை.

மேலும் காண்க

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads