பெக்கி கார்ட்டர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மார்கரெட் எலிசபெத் கார்ட்டர் (ஆங்கிலம்: Margaret Elizabeth Carter) என்பவர் மார்வெல் காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய கனவுருப்புனைவு கதாபாத்திரம் ஆகும். இவர் வழக்கமாக கேப்டன் அமெரிக்கா வரைகதை புத்தகங்களில் துணை கதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்டுள்ளார்.
இந்த கதாப்பாத்திரத்தை ஸ்டான் லீ மற்றும் ஜாக் கிர்பி ஆகியோர் இணைந்து உருவாக்கினார்கள். இவரின் முதல் தோற்றம் மார்ச் 1941 இல் வெளியான 'கேப்டன் அமெரிக்கா #1' என்ற கதையில் தோற்றுவிக்கப்பட்டது. இவரின் கதாபாத்திரம் இரண்டாம் உலகப் போரின் போது இசுடீவ் ரோஜர்ஸின் காதலியாகவும், பின்னர் கேப்டன் அமெரிக்காவின் நவீனகால குறிப்பிடத்தக்க சரோன் கார்ட்டர் என்பவரின் உறவினராகவும் அறியப்படுகிறார்.
இந்த கதாபாத்திரம் வரைகதையில் இருந்து திரைப்படத்திற்கு உயிர் கொடுக்கும் விதமாக நடிகை கெய்லி அட்வெல்[1][2] என்பவர் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர் (2011),[3] கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர் (2014), அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015), ஆன்ட்-மேன் (2015), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) போன்ற படங்களிலும், ஏஜென்ட்ஸ் ஒப் ஷீல்ட் மற்றும் ஏஜென்ட் கார்ட்டர் (2015-2016) போன்ற தொலைக்காட்சித் தொடர்களிலும் வாட் இப்...? (2021) என்ற இயங்குபடத்திலும் நடித்துள்ளார்.
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads