ஏஜென்ட் கார்ட்டர் (தொலைக்காட்சி தொடர்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஏஜென்ட் கார்ட்டர் (ஆங்கிலம்: Agent Carter) என்பது ஏபிசி தொலைக்காட்சிக்காக கிறிஸ்டோபர் மார்கஸ் மற்றும் இசுடீபன் மெக்பீலி[3] ஆகியோரால் உருவாக்கப்பட்ட ஒரு அமெரிக்க நாட்டு அதிரடி சாகச மீநாயகத் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[4][5][6]

விரைவான உண்மைகள் ஏஜென்ட் கார்ட்டர், வகை ...

இது பெக்கி கார்ட்டர் என்ற மார்வெல் காமிக்ஸ் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கதாபாத்திரம் 2011 ஆம் ஆண்டு வெளியான கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர்[7] மற்றும் 2013 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ஏஜென்ட் கார்ட்டர் என்ற மார்வெல் ஒன்-சாட்சு[8] குறும்படத்தில் இவரது கதாப்பாத்திரம் அறியப்படுகின்றது. இது மார்வெல் திரைப் பிரபஞ்சத்தில் அமைக்கப்பட்டுள்ளது மற்றும் இதன் உரிமைகள் திரைப்படங்கள் மற்றும் பிற தொலைக்காட்சித் தொடர்களுடன் தொடர்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறது. இந்தத் தொடரை ஏபிசி ஸ்டுடியோஸ், மார்வெல் தொலைக்காட்சி மற்றும் எஃப்&பி ஃபேஸ்காஸ் & பட்டர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, ஜேம்ஸ் டி'ஆர்சி,[9] சாத் மைக்கேல் முர்ரே மற்றும் என்வர் ஜோகாஜ்[10] ஆகியோருடன் இணைந்து கெய்லி அட்வெல்[11][12]என்பவர் பெக்கி கார்டராக நடித்துள்ளார்.

இந்த தொடரில் கார்ட்டர் என்பவர் 1940களில் அமெரிக்காவில் ஒரு தனிப் பெண்ணின் ரகசிய முகவராக வாழ்க்கையை சமநிலைப்படுத்த போராடுகிறார். இந்த தொடர் குறும்படத்தால் ஈர்க்கப்பட்டு தொடரின் உருவாக்கம் செப்டம்பர் 2013 இல் தொடங்கியது, சனவரி 2014 இல் நடிகை கெய்லி அட்வெல் என்பவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உறுதி செய்யப்பட்டார். இது மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களில் இருந்து பல கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்களங்களின் தோற்றத்தை அறிமுகப்படுத்துகிறது,

இந்த தொடரின் எட்டு அத்தியாயங்கள் அடங்கிய முதல்பருவம் சனவரி 6 முதல் பிப்ரவரி 24, 2015 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பப்பட்டது, அதே சமயம் 10 அத்தியாயங்கள் கொண்ட இரண்டாவது பருவம் சனவரி 19 முதல் மார்ச் 1, 2016 வரை ஒளிபரப்பப்பட்டது.

Remove ads

தொடரின் பருவங்கள்

மேலதிகத் தகவல்கள் பருவங்கள், ஒளிபரப்பு ...

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads