பெட்டமுகலாளம்
கிருஷ்ணகிரி மாவட்ட சிற்றூர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பெட்டமுகலாளம் ( Bettamugulalam ) என்பது தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த வருவாய் கிராமம் ஆகும். [1] இந்த ஊர் பெட்டமுகலாளம் ஊராட்சிக்கு உட்பட்டது. இங்குள்ள மலையும் பெட்டமுகலாளம் என்று அழைக்கபடுகிறது.
Remove ads
பெயராய்வு
பெட்ட என்ற கன்னடச் சொல்லுக்கு மலை என்பது பொருளாகும். முகுலாளம் என்றால் மிகவும் ஆழமான பகுதி என்பதாகும். இது ஒரு மலைக் கிராமம் ஆகும். மலைமேல் இருந்து ஆழமான பகுதியைக் காண முடிவதால் இப்பெயரைப் பெற்றிருக்கலாம் என்கிறார் கோ. சீனிவாசன்.[2]
அமைவிடம்
இந்த ஊர் தேன்கனிக்கோட்டையிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்டத் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 47 கி.மீ. தொலைவிலும், மாரண்டஅள்ளியில் இருந்து 15 கி.மீ தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 309 கி.மீ. தொலைவில் உள்ளது. [3] அருகில் உள்ள வானூர்தி நிலையம் பெங்களூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். அருகில் உள்ள தொடர்வண்டி நிலையம் 16 கி.மீ தொலைவில் உள்ள மாரண்டஅள்ளி தெடருந்து நிலையம் ஆகும்.
Remove ads
பெருங்கற்காலச் சின்னங்கள்
பெட்டமுகலாளத்தில் இருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் பாண்டுரார் பாறை என்றும் பாண்டுரார் குண்டு என்றும் பாண்டவர் கோயில் என்று அழைக்கப்படும் இடத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பெருங்கற்கால ஈமச் சின்னங்களில் ஒரு வகையான கல்வட்டங்கள், கல்திட்டைகள் போன்றவை உள்ளன.[4]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads