தேன்கனிக்கோட்டை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேன்கனிக்கோட்டை (Denkanikottai), இந்தியாவின் தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, தேன்கனிக்கோட்டை வட்ட நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். தேன்கனிக்கோட்டை நகரம் சோழர்கள், போசளர்கள் , முகலாயர்கள் மற்றும் பிரித்தானியர்கள் என பல்வேறு பேரரசுகள் ஆளுகைக்குட்பட்ட பகுதியாக இருந்துள்ளது. தேன்கனிக்கோட்டை சோழர்களின் ஆளுகைக்குட்பட்ட பகுதியாக இருந்துள்ளது என்பதற்கு 13-ஆம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் கால கல்வெட்டு கிடைத்துள்ளது. போசளர்கள் கால கட்டிடக்கலைக்கு வேட்டையாடிய பிரான் (பேட்டராய சுவாமி கோயில்) திருக்கோயில் சிறந்த சான்றாகும். தேன்கனிக்கோட்டை நகரம் முந்தைய சேலம் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
Remove ads
அமைவிடம்
தேன்கனிகோட்டை பேரூராட்சிக்கு கிழக்கில் கிருஷ்ணகிரி 65 கி.மீ.; வடக்கில் ஒசூர் 24 கி.மீ.; தெற்கில் தருமபுரி 70 கி.மீ. தொலைவிலும் மாரண்டஹள்ளி 34கி.மீ. தூரத்திலும் உள்ளது. இதனருகில் அமைந்த தொடருந்து நிலையம் 12 கி.மீ. தொலைவில் உள்ள கெலமங்கலத்தில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
இந்த ஊர் பழைய பேட்டை, புதுப் பேட்டை என்ற இருபகுதிகளாக உள்ளது. மலைச்சரிவுகளில் மக்கள் வாழும் பகுதி புதுப்பேட்டை எனப்படுகிறது. பெருமாள் கோயில் உள்ள பகுதி பழைய பேட்டை எனப்படுகிறது.[3]
தேன்கனிக்கோட்டை பேரூராட்சி
13.26 ச.கி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 84 தெருக்களையும் கொண்டது. இது தளி (சட்டமன்றத் தொகுதி)க்கும், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5,393 வீடுகளும், 24,252 மக்கள்தொகையும் கொண்டது.[5]
பேட்ராய சாமி கோயில்
புகழ்பெற்ற வேட்டையாடிய பிரான் கோயில் அல்லது பேட்ராய சாமி கோயில் (பேட்டே என்ற கன்னட சொல்லுக்கு வேட்டை என்று பொருள்) தேன்கனிக் கோட்டையில் உள்ளது. இக்கோயில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையானது என்று கருதப்படுகிறது.
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads