பெட்டிக்கடை
திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பெட்டிக்கடை இன்று விடுமுறை (ஆங்கிலம்: Pettikadai Indru Vidumurai) என்கிற பெட்டிக்கடை என்பது 2019 ஆம் ஆண்டு விளையாட்டுக் கதைக்களம் கொண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இதனை எசக்கி கார்வன்னன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் சமுத்திரக்கனி, சாந்தினி தமிழரசன், வர்ஷா பொல்லம்மா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். திருமுருகன் போலீஸ் ஸாக வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருப்பார்[1][2] இப்படம் 22 பிப்ரவரி 2019 அன்று எல். கே. ஜி. மற்றும் கண்ணே கலைமானே போன்ற படங்களுடன் இணைந்து திரையரங்கில் வெளிவந்தது.[3][4]
Remove ads
கதைப் பின்புலம்
ஒரு கிராமத்திற்கு வந்து சிறு வணிகர்களை அடக்கும் இணைய பெரு வணிகத்தைக் கண்டுபிடித்து மீண்டும் போராட முடிவு செய்யும் ஒரு இளம் மருத்துவரின் கதை. இந்தப் படம் இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றத்தால் ஏற்படும் சமூக மாற்றங்களை விளக்குகிறது.
இன்று உள்ள கணிப்பொறி மற்றும் இணைய வளர்ச்சி மூலம் நமக்கு தேவையான எல்லாப் பொருட்களையும் வீட்டிலிருந்தே வாங்கிக் கொள்ள முடிகிறது. இந்த வசதி எல்லாப் பொருட்களைப் பார்ப்பதிற்கும், அதன் விலையை ஒப்பிட்டுப் பார்ப்பதிற்கும் வசதியைக் கொடுக்கிறது. இன்று நகரங்களில் ஆயிரக்கணக்கான கடைகள் ஒரே வணிக வளாகத்திலிருக்கும் ஆனால் கடைகளையே பார்க்க முடியாத காலம் ஒன்றிருந்தது, அப்பொழுது வாரசந்தைதான் மக்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கும் இடமாக இருந்தது. அந்தக் காலத்தில் இருபது ஊருக்கு ஒரு இடத்தில்தான் ஒரு பெட்டிக்கடையே இருக்கும். அந்தக் கடை அன்று பிரபலமானதாக முக்கியத்துவம் கொண்டதாக இருக்கும். அப்படி ஒரு பெட்டிக்கடையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கதைதான் 'பெட்டிக்கடை இன்று விடுமுறை' என்கிற தமிழ் படம் ஆகும். இப்படத்தில் பொருளாதாரம், சமுகமாற்றம், காதல், கலகலப்பு நகைச்சுவை என எல்லாம் கலந்திருக்கிறது. நெல்லை வட்டாரத்தில் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன் நடக்கும் கதை இது. நெல்லைப் பகுதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரங்களில் படக்குழு பயணித்து, ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் புதுமுக இயக்குநர் இ. கார்வண்ணன் தயாரித்து, அவரே இயக்கினார். இது இன்றைய இளைஞர்களின் அப்பாக்களின் காதல் கதை என்று கூறலாம். அக்காலக் கட்டத்தின் அசல் தன்மையுடன் மண்ணின் மணம் மாறாத யதார்த்த பதிவாக இது இருக்கும். படத்தில் வரும் கில்லி விளையாட்டு இரண்டு ஊர்ப்பகை வருமளவுக்கு முக்கியத்துவம் பெறுகிறது. என்கிறார் இயக்குநர்.[5]
நாயகனாக 'மொசக்குட்டி' வீரா, நாயகி உள்பட பலரும் புதுமுகங்களாக நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் இயக்குநர் சமுத்திரக்கனி நடித்துள்ளார். மேலும் ஆர். சுந்தர் ராஜன், 'சாட்டை' துரைமுருகன், செந்தில் ஆகியோரும் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு அருள், இசை மரிய மனோகர், வசனம் பிரபல எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி எனப் பலரும் பங்களித்துள்ளனர்.
Remove ads
நடிகர்கள்
- சமுத்திரக்கனி
- திருமுருகன்
- துவாரகாவாக சாந்தினி தமிழரசன்
- தங்கமாக வர்சா பொல்லம்மா
- ஆர்.சுந்தர்ராஜன்
- ராஜேந்திரன்
- வீர
- பிரியா அஷ்மிதா
- சுந்தர்
- தினகர்
- 'சாட்டை' துரைமுருகன்
சந்தைப்படுத்தல்
படத்தின் அதிகாரப்பூர்வ முன்னோட்டம் 10 பிப்ரவரி 2019 அன்று வெளியிடப்பட்டது.[6]
ஒலிப்பதிவு
- சுதலமதா சாமிகிட்டா - பாடியவர் சிரேயா கோசல்
- ஆசையா ஆசய்யா - பாடியவர் சிரேயா கோசல்
விமர்சனம்
"பொதுவாகத் திரைப்படங்கள் நம்மை ஒரு உணர்ச்சிபூர்வமான சவாரிக்கு அழைத்துச் செல்கின்றன. அவை நம்மைச் சிரிக்க வைக்கின்றன, புண்படுத்துகின்றன, பச்சாதாபம் கொள்ள வைக்கின்றன, சிரிக்க வைக்கின்றன. சில வேளை அவை நமக்கு ஒரு சமூகப் பாடம் கற்பிக்கும், இன்னும் சில வேளை ஒரு உன்னதமான காரணத்திற்காக நம்மைச் சீற்றம் கொள்ளவைக்கும். பெட்டிக்கடை என்பது பிந்தைய சூத்திரத்தைத் தூண்டும் ஒரு வகையான படம், ஆனால் அதன் பின்னடைவான கதையால் படம் பார்வையாளர்களைச் சீற்றப்படுத்துகிறது." என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் விமர்சித்துள்ளது[7]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads