பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி ஆய்வுகள் பல்கலைக்கழகம்

இந்தியப் பல்கலைக்கழகம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி ஆய்வுகள் பல்கலைக்கழகம் (University of Petroleum and Energy Studies) என்பது இந்திய நகரமான தேராதூன் நகரிலுள்ள உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகமாகும். 2019 முதல், இலாப நோக்கத்துடன் இயங்கும் கல்வி குழுவான உலகாய பல்கலைக்கழக அமைப்பு முறை என்ற நிறுவனத்திற்கு இது சொந்தமானது.

விரைவான உண்மைகள் குறிக்கோளுரை, வகை ...
Remove ads

வரலாறு

உத்தராகண்டம் மாநில சட்டமன்றத்தின் பெட்ரோலியம் மற்றும் எரி சக்தி ஆய்வுகள் சட்டம் 2003 வழங்கும் அதிகாரத்தின்படி இப்பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. பல்கலைக்கழக மானியக்குழுவும் இப்பல்கலைக்கழகத்திற்கான அங்கீகாரம் வழங்கியது.[1] படித்து முடித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுத்தல், கல்வி மேம்பாட்டுத் திட்டங்கள், வளாக வசதியளித்தல் போன்ற நடைமுறைகளுக்கு ஐந்து நட்சத்திரக் குறியீடு மதிப்பீடும், ஒட்டுமொத்த கற்பித்தல் செயல்முறைகளுக்கு நான்கு நட்சத்திரக் குறியீடு மதிப்பீடும் உலக பல்கலைக்கழகங்களுக்கான தர வரிசையை அளிக்கும் குவாக்குவாரெல்லி சிமண்ட்சு என்ற பிரித்தானிய நிறுவனம் இப் பல்கலைக்கழகத்திற்கு வழங்கியுள்ளது.[2]

பொறியியல் பள்ளி, கணிப்பொறி பள்ளி, வடிவமைப்புப் பள்ளி, சட்டப் பள்ளி, வணிகப் பள்ளி, உடல் அறிவியல் பள்ளி, நவீன ஊடகப் பள்ளி போன்ற பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட ஏழு பள்ளிகள் மூலம் இளநிலை மற்றும் முதுநிலை பட்டங்கள் இங்கு வழங்கப்படுகின்றன.

Remove ads

உரிமையாளர்கள்

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட இலவுரியேட்டு பன்னாட்டு பல்கலைக்கழகங்கள் நிறுவனத்தின் கையில் 2013 ஆம் ஆண்டு இப்பல்கலைக்கழகம் இருந்தது.[3] பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி ஆய்வுகள் பல்கலைக்கழகம் 2019 ஆம் ஆண்டு உலகாய பல்கலைக்கழக அமைப்பு முறை என்ற நிறுவனத்துடன் கல்வி, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதனால் அந்நிறுவனம் இப்பல்கலைக்கழகத்தின் கல்வி ஒத்துழைப்பில் நுழைந்தது.[4][5]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads