பெண்ணாகடம் பிரளயகாலேசுவரர் கோயில்

From Wikipedia, the free encyclopedia

பெண்ணாகடம் பிரளயகாலேசுவரர் கோயில்
Remove ads

பெண்ணாகடம் பிரளயகாலேஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற தலமாகும். இது கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், பெண்ணாடத்தில் அமைந்துள்ளது. மெய்கண்டார் அவதரித்ததும் கலிக்கம்ப நாயனார் பேறு பெற்றதும் இத்தலத்தில் எனப்படுகிறது. தேவ கன்னியரும், காமதேனுவும், வெள்ளை யானையும் வழிபட்ட தலமென்பதும் அப்பர் சூல இடபக் குறி பொறிக்குமாறு வேண்டிப் பெற்ற தலமென்பதும் தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும்.

விரைவான உண்மைகள் தேவாரம் பாடல் பெற்ற பெண்ணாகடம் பிரளயகாலேசுவரர் கோயில், பெயர் ...
Remove ads

பெயர்க் காரணம்

தேவகன்னியரும்(பெண்)+காமதேனுப் பசுவும்(ஆ)+வெள்ளை யானையும்(கடம்)[1] வழிபட்டதால் இத்தலத்திற்கு பெண்+ஆ+கடம் = பெண்ணாகடம் என்று பெயர் ஏற்பட்டது. ஆனால் அப்பெயர் காலபோக்கில் மறுவி தற்காலத்தில் பெண்ணாடம் என்று நிலையான பெயராகிவிட்டது.

சிறப்பு

இக்கோயிலின் மூலவர் இருக்கும் கருவறை தூங்கானை மாடம் (வடமொழில் கஜபிருஷடம்) வடிவில் அமைந்துள்ளது. திருநாவுக்கரசர் தமது திருமேனியில் திரிசூலக் குறியும் இடப முத்திரையும் பெற்ற தலமிது. இத்தலத்து மூலவரை முன் வாயில் மூலம் மட்டுமல்லாமல் மற்ற மூன்று புறத்திலிருந்தும் பக்தர்கள் வணங்குவதற்காக பலகணிகள் உள்ளன.

கலிக்கம்ப நாயனார் அவதாரத் தலம்[2]

படத்தொகுப்பு

மேற்கோள்கள்

இவற்றையும் பார்க்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads