பெந்தம்-கூக்கர் வகைப்பாடு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பெந்தம்-கூக்கர் வகைப்பாடு என்பது ஒரு இயற்கை முறை தாவரவியல் வகைப்பாடு ஆகும். இதன்படி, ஒரு தாவரத்தின் பல முக்கிய பண்புகளை அடிப்படையாகக் கொண்டு வகைப்பாடு செய்யப்படுகிறது. இம்முறை இந்தியா, இங்கிலாந்து, பல காமன்வெல்த் நாடுகளில் பின்பற்றப்படுகிறது. குறிப்பாக உலகின் பல உலர் தாவரகங்களிலும், தாவரத் தோட்டங்களிலும் பின்பற்றப்படுகிறது.

வகைப்பாட்டியல் தோற்றம்

தொடக்ககாலத் தாவரவியல் வகைப்பாட்டியல் அறிஞர்கள், பல்வேறு விதமான வகைப்பாடுகளைப் பின்பற்றினர். அவ்வகைப்பாடுகளை, 1) செயற்கை முறை, 2) இயற்கை முறை, 3) மரபுவழி முறை என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சியார்ச்சு பெந்தம்[1] (1800-1884) மற்றும் சர் யோசப் டால்டன் கூக்கர் (1817-1911)[2][3] ஆகிய இரு தாவரவியல் வல்லுநர்களால் இவ்வகைப்பாடு உருவாக்கப்பட்டது. இவர்களுடைய வகைப்பாடு, 'செனிரா பிளாண்டாரம்' என்ற மூன்று தொகுதிகள் (1862–1883)[4] கொண்ட நூல்களாக வெளியிடப்பட்டது. இத்தொகுதிகளின் 202 துறைகளில், 97.205 சிற்றினங்கள் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன.

Remove ads

பெந்தம்-கூக்கர் வகைப்பாட்டு சுருக்கம்

இதன்படி விதைத் தாவரங்கள், 1) 'டைகாட்டிலிடனே' (DICOTYLEDONE), 2) 'சிம்னோசுபெர்மே' (GYMNOSPERMEÆ), 3) 'மோனோ காட்டிலிடனே' (MONOCOTYLEDONE) என மூன்று வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தற்காலத்துறைகள், 'கோஅர்ட்டுகள்' (COHORS) எனவும், தற்காலக்குடும்பங்கள் 'துறைகள்' எனவும் வகைப்படுத்தப் பட்டிருந்தன.

வரிசை எண்பகுதிகளும், உட்பகுதிகளும்எண்ணிக்கைகுறிப்புகள்
1.
டைகாட்டிலிடனே
அ) 'பாலிபெட்டலே'
ஆ) 'கேமோபெட்டலே'
இ) 'மோனோகைமேடியே'
084
045
036
2.'சிம்னோசுபெர்மே'
003
3.'மோனோ காட்டிலிடனே'
034
மொத்தம்
202
Remove ads

ஊடகங்கள்

இவ்வகைப்பாட்டின் நிறைகள்

  • இத்தாவர வகைப்பாடு, நுண்ணிய நேரடி ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு, மிகவும் இயற்கையான முறையில் ஏற்படுத்தப்பட்ட வகைப்பாடு ஆகும்.
  • இதில் விவரிக்கப்பட்ட தாவரங்களின் விளக்கங்கள் தெளிவாகவும், முழுமையாகவும், சரியாகவும் இருப்பது இதன் சிறப்பாகும்.
  • இது பின்பற்றுவதற்கு எளிமையாகவும், தாவரங்களை இனங்கண்டறிய எளிய வழிகளையும் கொண்டுள்ளது.
  • இதன் பெரும்பான்மையான கருத்துக்கள், தற்கால மரபுவழி கொள்கைகளுக்கு ஏற்புடையதாக இருக்கிறன. எடுத்துக்காட்டாக. தாவரங்களின் வரிசையமைப்பில், மிக எளிய தொன்மையான பண்புகளையுடைய தாவரங்கள் இடம் பெறுகின்றன.
  • மரபியல் அடிப்படையில், ஒருவித்திலைத்தாவரங்கள் இறுதியில் அமைந்திருப்பது இதன் மேலோங்கிய சிறப்பு இயல்பாகக் கருதப்படுகிறது.
Remove ads

இவ்வகைப்பாட்டின் குறைகள்

  • பூக்கும் தாவரங்கள் என்ற பகுதி, ஒருவித்திலைத் தாவரத்திற்கும், இருவித்திலைத் தாவரத்திற்கும் நடுவில் இருப்பது தவறாகும்.
  • மரபு அடிப்படையில் உயர்ந்த ஒருவித்திலைத்தாவரமான 'ஆர்க்கிடேசி', தொன்மையானத் தாவரங்களுடன் வைக்கப்பட்டிருக்கிறது.
  • மாறா இயல்புகளைப் பெற்றிருக்கும் மலர்களின் பண்புகள், இவ்வகைப்பாட்டியலுக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.
  • ஒன்றுக்கொன்று தொடர்பற்றத் தாவரங்கள், ஒரே உட்பகுதியில் வைக்கப்பட்டு இருக்கின்றன.
Remove ads

மேற்கோள்கள்

இக்கட்டுரைகளையும் காணவும்

புற இணைய இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads