உலர்தாவரகங்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இங்கு கண்டங்களின் அடிப்படையில், உலர்தாவரகங்கள் (ஆங்கிலம்: "Herbarium"(ஒருமை) "herbaria"(பன்மை) )அட்டவணைப் படுத்தப்படுகின்றன. அவ்வாறு அட்டவணைப்படுத்தப்பட்ட பின்பு, ஒவ்வொரு உலர் தாவரகும் தன்னகத்தே கொண்டுள்ள, உலர் தாவரகத்தாளின் எண்ணிக்கைகளும், பிற அடிப்படைக் குறிப்புகளும் தரப்படுகின்றன. உலர்தாவரகத்தில் பல வகைகள் உண்டு. பெரும்பான்மையான உலர்தாவரகத்தாள் வெள்ளைநிறமாகவும், அதன் வலப்புறகீழ்பக்கத்தில் ஒட்டப்படும் தாவரம் பற்றிய வகைப்பாட்டியல் குறிப்புகளும், நிலபரவல் குறிப்பும், அம்மாதிரியை எடுத்துப் பாதுகாத்தவர் பெயரும் குறிக்கப்படுகிறது.
ஒரு பேரினத்தின் கீழ் வரும், ஒரே வகையான சிற்றினங்கள் அனைத்தும் ஒன்றாக தொகுக்கப்பட்டு, ஒரு பேரின அடைவிலேயே பாதுகாக்கப்படுகின்றன. பிறகு, அப்பேரினங்களின், குடும்ப அடைவில், அப்பேரினங்களுக்குரிய உலர்தாவரத்தாள்களுள்ள அடைவுகள் பேணப்படுகின்றன. உலர்தாவரகத்தாளில் ஒட்டப்படும் தாவரமாதிரிகள் நிறம் மாறி விடுவதால், சில உலர்தாவரகங்கள் நிறங்களையும் குறிப்பிட்டு, அதற்குரிய குறிப்புத்தாளைக் கோர்த்து வைத்திருக்கும் பழக்கத்தைப் பின்பற்றுகின்றன.
Remove ads
ஆப்பிரிக்கா
Remove ads
அடிக்குறிப்புகள்
வெளிப்புற இணையங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads