பெராக்சைடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பெராக்சைடு (Peroxide) என்பது R-O-O-R என்ற அமைப்பினை உடைய சேர்மமாகும்.[1] பெராக்சைடு மூலக்கூற்றில் உள்ள O−O தாெகுதியானது பெராக்சைடு தாெகுதி அல்லது பெராக்சோ தாெகுதி என அழைக்கப்படுகிறது. ஆக்சைடு அயனிகளுக்கு மாற்றாக,பெராக்சைடு அயனியில் உள்ள ஆக்சிசன் அணுக்கள் −1 ஆக்சிசனேற்ற நிலையைக் கொண்டுள்ளன.

மிகவும் பொதுவான பெராக்சைடு ஐதரசன் பெராக்சைடு (H2O2), ஆகும். இதுவே பேச்சு வழக்கில் "பெராக்சைடு" என அழைக்கப்படுகிறது. இச்சேர்மம் வெவ்வேறு செறிவுகள் கொண்ட நீர்க்கரைசல்களாக சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. ஐதரசன் பெராக்சைடு நிறமற்ற திரவமாகும். இச்சேர்மம் ஒரு ஆக்சிசனேற்றியாகவும் மற்றும் ஒரு வெளுப்பாக்கியாகவும் பயன்படுத்தப்படுகிறது. கரிமச் சேர்மங்கள் இச்சேர்மத்தின் செறிவு மிக்க கரைசல்களுடன் தாெடர்பு கொள்ளும் போது மிகவும் ஆபத்தை விளைவிக்கக்கூடியதாகும்.
ஐதரசன் பெராக்சைடினைத் தவிரவும், இன்னும் சில முக்கிய பெராக்சைடு வகை சேர்மங்கள் பின்வருமாறு:
- பெராக்சைடு அமிலங்கள், நன்கறியப்பட்ட அமிலங்களின் பெராக்சி வழிப்பொருட்கள், உதாரணங்கள்: பெராக்சிகந்தக அமிலம் மற்றும் பெரசிட்டிக் அமிலம்.
- உலோக பெராக்சைடுகள், உதாரணங்கள்: பேரியம் பெராக்சைடு (BaO2) மற்றும் சோடியம் பெராக்சைடு (Na2O2).
- கரிம பெராக்சைடுகள், C-O-O-C/H பிணைப்பைக் கொண்டுள்ள சேர்மங்கள். ஒரு உதாரணம் மூவிணைய பியூட்டைல்ஐதரோபெராக்சைடு
- முக்கியத் தொகுதி பெராக்சைடுகள், E-O-O-E பிணைப்பைக் கொண்டுள்ள சேர்மங்கள் (E = முக்கியத் தொகுதி தனிமம், ஒரு உதாரணம்: பொட்டாசியம் பெராக்சிடைசல்பேட்டு.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads