பெரியபாளையம் பவானி அம்மன் கோயில்

தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஓர் அம்மன் கோயில் From Wikipedia, the free encyclopedia

Remove ads

பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் அல்லது பாளயத்தம்மன் கோயில் என்ற அம்மன் கோயில், சென்னையில் இருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில், திருவள்ளூர் மாவட்டத்தில், குண்டூர் செல்லும் வழியில், பெரியபாளையம் என்ற ஊரில் ஆரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் பவானி அம்மன் கோயில், அமைவிடம் ...
Remove ads

அம்மனின் திருக்கோலம்

பவானி அம்மன் தனது முன்புற வலது கையில் சக்தி ஆயுதம். பின் புறக்கரத்தில் சக்கராயுதம். இடது பின் கையில் சங்கு முன்புறக் கையில் கபாலம் ஏந்தியுள்ளது. இந்தக் கபாலத்தில் கலையரசி, அலையரசி, மலையரசி மூவரும் இருப்பதாக ஐதீகம்.

பிரார்த்தனைகள்

  • உடல் நலம் பெறவும், நீண்ட ஆயுளை ஆரோக்கியத்துடன் அடையவும் பெரிய பாளையத்து அம்மனை நினைத்தப்படி வருபவர்கள் அதிகம்.
  • பெண்கள், கணவன் நோய்வாய்பட்டிருந்தால், தங்கள் மாங்கல்யம் நிலைத்து நிற்க அம்மனை வேண்டி கொள்கிறார்கள். பின்னர் தங்கள் தாலியை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்துகிறார்கள்.
  • அம்மனுக்கு உகந்த வேப்பிலைகளை உடலில் கட்டிக்கொண்டு கோயிலைச் சுற்றி வந்து தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுகிறார்கள்.

[1].

வசதிகள்

  • பொங்கல் படையலிட 200 அடுப்புகளுடன் மண்டபத்தில் வசதிகள் உள்ளது.
  • முடிகாணிக்கை செலுத்த தனி மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
  • வேப்பஞ்சேலை பிரார்த்தனை செய்ய வரும் பக்தர்கள் உடைகளை களைந்து வேப்பஞ்சேலை கட்டுவதற்கு வசதியாக ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும் தனி தனி அறைகள் கட்டப்பட்டுள்ளன.
  • பக்தர்கள் கட்டணமின்றி தங்கி ஓய்வு எடுப்பதற்காக இரண்டடுக்கு மண்டபம் கட்டி வருகிறார்கள். ஆண்கள், பெண்களுக்கு தனி தனியாக நவீன கழிவறைகள், குளியல் அறைகள் கட்டப்பட்டுள்ளன.

பேருந்து வழித்தடங்கள்

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து --> 514, 514x,
வள்ளலார் நகர் (வி. நகர்) பேருந்து நிலையத்திலிருந்து --> 592, 547, 532.
பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து--> 593.
ஆவடி பேருந்து நிலையத்திலைருந்து--> 580x.
அம்பத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து --> 563, 562.
திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து --> 171,172,505A, சுந்தரம், சந்திரா, வசந்தா
செங்குன்றம் பேருந்து நிலையத்திலிருந்து -->532,547,562,593,592A,505A[2]
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads