செங்குன்றம்
சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
செங்குன்றம் (ஆங்கிலம்: Redhills), தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் வட்டம், நாரவாரிகுப்பம் பேரூராட்சியில் உள்ள ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]
Remove ads
அமைவிடம்
இது சென்னை நகரத்திலிருந்து வட-மேற்கு திசையில் சுமார் 18 கி.மீ. தொலைவில், புழல் நீர் தேக்கத்தின் கரையில், சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சிறிய நகரம் "செங்குன்றம்". இங்கு செங்குன்றம் ஏரி உள்ள்து.
செங்குன்றம், ஆவடி நகரத்திலிருந்து 22 கி.மீ. தொலைவிலும், பெரிய பாளையத்திலிருந்து 25 கி.மீ. தொலைவிலும், மாவட்டத்தின் தலைநகரான திருவள்ளூரிலிருந்து 37 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. பெரிய வடக்கத்திய நெடுஞ்சாலையில் (GNT) இந்நகரம் அமைந்துள்ளதால், சென்னையிலிருந்து வடக்கு நோக்கி செல்பவர்களுக்கு ஒரு முக்கிய பகுதியாக இது விளங்கிவருகின்றது. சென்னை நகரத்திற்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும், புழல் மற்றும் சோழவரம் ஏரிகளின் இடையில் இந்நகரம் அமைந்துள்ளதால் நிலத்தடி நீர் வளம் மிக்கதாக உள்ளது.
புழல் ஏரியின் மேற்கு கரைப் பகுதிகளில் வளமிக்க செம்மண் குன்றுகள் முன்னர் பெருமளவில் அமைந்திருந்தமையால் சிவந்த குன்று என பொருள்படும் செங்குன்றம் என்ற பெயர் இப்பகுதிக்கு வழங்கப்படுகிறது.
Remove ads
இயற்கை அமைப்பு
செங்குன்றம் - என்ற பெயரே, இந்நகரத்திற்கு இயற்கை வழக்கிய ஒரு கொடை. இப்பகுதியை சுற்றிலுமிருந்த செம்மண் குன்றுகள் இன்று முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது. மிஞ்சிய சில பகுதிகளை செங்குன்றம்-திருவள்ளூர் சாலையின் சில இடங்களில் இன்றும் காணலாம். சென்குன்றம் நகரம் தன்னுடைய பழைய இயற்கை வளங்களை இழந்துவிட்டது. மிஞ்சியிருப்பதெல்லாம், புழல் நீர் தேக்கம் ஒன்று மட்டும்தான். முன்னர் விளை நிலங்களாக இருந்த பகுதிகள் தற்போது குடியிருப்பு பகுதிகளாகிவிட்டது. சாலையின் இரு மருங்கிலும் இருந்த பெரிய புளியமரங்கள் வெட்டப்பட்டு சாலைகள் அகலமாக்கப்பட்டதும் இதற்கு முக்கிய காரணம்.
Remove ads
சுற்றுப்புற பகுதிகள்
தொண்டை மண்டலத்தின் 24 கோட்டங்களில் ஒன்றான புழல் கோட்டம் - ஞாயிறு, செங்குன்றத்திலிருந்து 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மேலும், புழல் மத்திய சிறைச்சாலை, சோழவரம் நீர் தேக்கம், அலமாதி, அம்பத்தூர், மாதவரம், திருக்கண்டலம், பெரியபாளையம் போன்றவை செங்குன்றத்தின் சுற்றுப்புற பகுதிகளாகும்.
பொருளாதாரம்
செங்குன்றத்தை சுற்றிலும் பல நெல்-அரிசி மண்டிகளும், நெல் ஆலைகளும் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளுகளும் உள்ளது.
போக்குவரத்து
சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை எண் 5 மற்றும் ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பு எண் 45 செங்குன்றத்தை கடந்து செல்கின்றது. மேலும், செங்குன்றம்-மாதவரம் நெடுசாலை, சிங்கபெருமாள் கோயில்-திருவள்ளூர்-செங்குன்றம் மாநில நெடுஞ்சாலை ஆகியவையும், செங்குன்றம் வழியே செல்கின்றது. சென்னை மாநகர பேருந்து போக்குவரத்துக் கழக பேருந்து சேவை, தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழக பேருந்து சேவை மற்றும் சில தனியார் பேருந்து போக்குவரத்து சேவையும் செங்குன்றத்தை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ஆந்திர மாநிலம் - நெல்லூர், புத்தூர், திருப்பதி, திருமலை, திருக்காளத்தி, ஐதிராபாத் ஆகிய பகுதிகளையும் சாலை வழியாக இணைக்கிறது.
அருகாமை இரயில் நிலையம் - பெரம்பூர் இரயில் நிலையம் செங்குன்றத்திலிருந்து-12 கி.மீ.
மாநகர போக்குவரத்துக் கழகம், சென்னை பேருந்து வழித்தட விவரம்
Remove ads
கல்வி நிறுவனங்கள்
செங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள கல்வி நிறுவனங்கள்:
ஆல்பா மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளி, மொண்டியம்மன் நகர்
டான்போஸ்கோ மெட்ரிக்குலேஷன் பள்ளி, கிராண்ட்லைன்
புனித மேரி மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளி, திருவள்ளூர் கூட்டுசாலை
எலைட் மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளி, திலகர் நகர்
அரசு மேனிலைப் பள்ளி (ஆண்கள்), செங்குன்றம்
அரசு மேனிலைப் பள்ளி (பெண்கள்), செங்குன்றம்
அரசு ஆதி திராவிடர் நல ஆண்கள் மேனிலைப் பள்ளி, செங்குன்றம் வடகரை
அரசு ஆதி திராவிடர் நல பெண்கள் மேனிலைப் பள்ளி, செங்குன்றம் வடகரை
சில்ரன்ஸ் பேரடைஸ் மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளி, மொண்டியம்மன் நகர்
விவேகானந்தா மெட்ரிக்குலேஷன் பள்ளி, அறிஞர் அண்ணா நகர்
நேஷ்னல் லோட்டஸ் மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளி, காமராஜர் நகர்
ஹோலி சைல்ட் மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளி, புள்ளி லைன்
கென்னடி மெட்ரிக்குலேஷன் பள்ளி, செங்குன்றன்
டாக்டர். சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளி, கிராண்ட்லைன்
புனித. ஜோசப் மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளி, செங்குன்றம்
நல்லழகு பாலிடெக்னிக், கிராண்ட்லைன்
ஆர். பி. கோதி ஜெயின் பெண்கள் கலைக் கல்லூரி, சோத்துப்பாக்கம்
கோஜன் பொறியியல் கல்லூரி, எடபாளையம்
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads