பெரியார் (திரைப்படம்)
ஞான ராஜசேகரன் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 2007 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழத் திரைப்படம் பெரியார் ஆகும். இத்திரைப்படம் தெலுங்கு மொழியில் பெரியார் ராமசாமி நாயக்கர் எனும் பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது.[1] இத்திரைபடத்தில் பெரியாராக சத்தியராஜ் நடித்தார். ஞான ராஜசேகரன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை உருவாக்குவதற்கு 95 இலட்சம் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டது. இப்படத்தை லிபர்டி கிரியேஷன்ஸ் சார்பில் கோ.சாமிதுரை தயாரித்தார்.
Remove ads
நடிகர்கள்
- சத்யராஜ் - ஈ. வெ. இராமசாமி
- சந்திரசேகர் - பெரியாரின் தோழன் எஸ். இராமநாதன்
- ஜோதிமயி - நாகம்மாள்
- குஷ்பூ - மணியம்மை
- நிழல்கள் ரவி
- ஆர்த்தி குமார் - சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி ('இராஜாஜி')[2]
- எஸ். எஸ். ஸ்டான்லே - கா. ந. அண்ணாதுரை
- மோகன் ராமன் - அம்பேத்கர்
- சொர்ணமால்யா (நடிகை)
- டைப்பிஸ்ட் கோபு - நிருபர்
பாடல்கள்
பாடலாசிரியர் - வைரமுத்து, இசையமைப்பு - வித்யாசாகர்
- பகவான் ஒரு நாள், ஆகாயம் படைச்சார் - மதுபாலகிருஷ்ணன் குருசரண், சூர்யபிரகாஷ், முரளிதரன்
- இடை தழுவிக்கொள்ள, ஜடை தடவிக்கொள்ள - பிரியா சுப்பிரமணியன்
- கடவுளா நீ கல்லா - மதுபாலகிருஷ்ணன் குருசரண், மானிக்கா வினாயகன், சந்திரன், ரோசினி
- தை தை தை பெண்ணுரிமை செய் செய் - மாணிக்க விநாயகம், விஜயலட்சுமி சுப்பிரமணியன்
- தாயும் யாரோ, தந்தை யாரோ, நானும் யாரோ யார் யாரோ? - மது பாலகிருஷ்ணன்
Remove ads
விமர்சனம்
ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய விமர்சனத்தில் "பெரியாரின் இளமைக் கால விஷயங்களைச் சற்று வேகப்படுத்தி நீளத்தைக் குறைத்திருந்தால், அரசியல் மாற்றங்கள் நிறைந்த பிற்பகுதி வரலாற்றுக்கு இன்னும் தாராளமாக இடம் கொடுத்திருக்க முடியுமே! பெரியாரை பகுத்தறிவுப் பகலவனாகப் பேரொளி வீசவைத்த இன்னும் பல சம்பவங்களையும் விறு விறுப்பாகக் காட்டியிருக்க முடியுமே! இந்தத் தலைமுறையின் மனதில் பெரியாரின் பெருமைகளைக் கூடுதல் பொலிவோடு பதியவைத்திருக்கவும் முடியுமே! மற்றபடி, ஓர் இமயத்தை செல்லூலாய்டில் பதிவு செய்யும் இந்த முயற்சியை, மதிப்பெண் தராசினால் நிறுத்துப் பார்க்க இயலுமா, என்ன!" என்று எழுதினர்.[3]
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads