பெரிலியம் ஐதராக்சைடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பெரிலியம் ஐதராக்சைடு (Beryllium hydroxide) என்பது அமிலத்திலும் காரத்திலும் கரையக்கூடிய ஒர் ஈரியல்பு ஐதராக்சைடு ஆகும். இதனுடைய மூலக்கூறு வாய்பாடு Be(OH)2 பெரைல் மற்றும் பெர்டிராண்டைட்டு[4] தாதுக்களில் இருந்து பெரிலியம் உலோகத்தைப் பிரித்தெடுக்கும்போது உடன் விளைபொருளாக பெரிலியம் ஐதராக்சைடு கிடைக்கிறது. இவ்வுப்பின் கரைசலுடன் காரத்தைச் சேர்க்கும்போது கூழ்மம் போன்ற ஆல்பா வடிவம் உருவாகிறது. தொடர்ந்து இதைச் சூடுபடுத்தினால் அல்லது இடையூறின்றி அப்படியே வைத்திருந்தால் சாய்சதுர வடிவ β- வடிவ வீழ்படிவாக கிடைக்கிறது[5]. துத்தநாக ஐதராக்சைடு Zn(OH)2 போன்றே இதுவும் நான்முக பெரிலியம் மையங்களைக் கொண்டுள்ளது.[6]
Remove ads
வேதிவினைகள்
காரங்களுடன் வினைபுரிகையில் இது காரத்தில் கரைந்து நான்கு ஐதராக்சிடோபெரைலேட் எதிர்மின் அயனியாக உருவாகிறது. சோடியம் ஐதராக்சைடு கரைசலுடன்[7] பின்வருமாறு வினை நிகழ்கிறது,
- 2NaOH(aq) + Be(OH)2(s) → Na2Be(OH)4(aq)
அமிலங்களுடன் வினைபுரியும் போது பெரிலியம் உப்புகள் உருவாகின்றன.[7] உதாரணமாக கந்தக அமிலத்துடன் புரியும் வினையில் பெரிலியம் சல்பேட்டு உருவாகிறது.
- Be(OH)2 + H2SO4 → BeSO4 + 2H2O
பெரிலியம் ஐதராக்சைடு 400 பாகை செல்சியசு வெப்பநிலையில் நீர் நீக்கப்பட்டு கரையும் தன்மை கொண்ட வெண்மை நிறத் துகளான பெரிலியம் ஆக்சைடு உண்டாகிறது.:[7]
- Be(OH)2 → BeO + H2O
மேலும் இதை அதிக வெப்பநிலைக்குச் சூடுபடுத்தினால் அமிலத்தில் கரையாத பெரிலியம் ஆக்சைடாக மாறுகிறது.[7]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads