பெருக்கச் செவ்விய எண்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கணிதத்தில், பெருக்கச் செவ்விய எண் அல்லது பெருக்க நிறைவெண் (multiply perfect number, multiperfect number, pluperfect number) என்பது ஒரு பொதுமைப்படுத்தப்பட்ட செவ்விய எண்ணாகும்.

k ஒரு இயல் எண் எனில், n என்ற நேர்ம முழுவெண்ணின் அனைத்து நேர்ம வகுஎண்களின் கூட்டுத்தொகை (வகுஎண் சார்பு) σ(n) = kn ஆக இருந்தால் n ஆனது k-செவ்விய அல்லது k-மடி செவ்விய எண் என அழைக்கப்படும். k இன் குறிப்பிட்ட மதிப்பிற்கு k-செவ்விய எண்ணாகவுள்ள எண்கள் "பெருக்கச் செவ்விய எண்கள்" என்ற பொதுப்பெயரால் அழைக்கப்படுகின்றன.. 2014 வரையிலான கணக்கீட்டின்படி, k = 11 வரையுள்ள ஒவ்வொரு மதிப்பிற்குமான k-செவ்விய எண்கள் கண்டறியப்பட்டுள்ளன.[1].
ஓர் எண் n, செவ்விய எண்ணாக இருக்கத் தேவையான கட்டுப்பாடு σ(n) = 2n என்பதால், n ஆனது 2-செவ்வியதாக "இருந்தால், இருந்தால் மட்டுமே" அது ஓர் செவ்விய எண்ணாகும்.
k = 1 தவிர்த்தப் பிற ஒற்றையெண்களுக்கான பெருக்கச் செவ்விய உள்ளனவா என்பது கண்டறியப்படவில்லை.
சில துவக்க பெருக்கச் செவ்விய எண்கள்:
- 1, 6, 28, 120, 496, 672, 8128, 30240, 32760, 523776, 2178540, 23569920, 33550336, 45532800, 142990848, 459818240, ... (OEIS-இல் வரிசை A007691)
.
Remove ads
எடுத்துக்காட்டு
120, ஒரு 3-செவ்விய எண்ணாகும்.
- 120 இன் வகுஎண்களின் கூட்டுத்தொகை:
- σ(120) = 1 + 2 + 3 + 4 + 5 + 6 + 8 + 10 + 12 + 15 + 20 + 24 + 30 + 40 + 60 + 120 = 360 = 3 x 120.
கண்டறியப்பட்டுள்ள மிகச் சிறிய k-செவ்விய எண்கள்
கீழுள்ள அட்டவணை k ≤ 11 மதிப்புகளுக்கான கண்டறியப்பட்டுள்ள மிகச் சிறிய k-செவ்விய எண்களைத் தருகிறது (OEIS-இல் வரிசை A007539) :
Remove ads
பண்புகள்
கீழுள்ள பண்புகளை நிறுவக் கூடியனவாகும்:
- pஒரு பகா எண்; n, ஒரு p-செவ்விய எண் மற்றும் p ஆனது n இன் வகுஎண் அல்ல எனில், pn ஒரு (p + 1)-செவ்விய எண்ணாக இருக்கும். n/2 ஆனது ஒற்றைச் செவ்விய எண்ணாக "இருந்தால், இருந்தால் மட்டுமே", முழுவெண் n ஆனது 2 ஆல் வகுபடக்கூடிய, ஆனால் 4 ஆல் வகுக்கமுடியாத 3-செவ்விய என்ணாக இருக்கும். ஆனால் அத்தகைய எண்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.
- 3n ஒரு 4k-செவ்விய எண்ணாகவும், 3 ஆனது n இன் வகுஎண்ணாக இல்லாமலும் இருந்தால், n, ஒரு is 3k-செவ்விய எண்ணாக அமையும்.
ஒற்றைப் பெருக்கச் செவ்விய எண்கள்
1 ஐத் தவிர வேறு ஒற்றைப் பெருக்கச் செவ்விய எண்கள் உள்ளனவா என்பது அறியப்படாததாகவே உள்ளது. இருப்பினும் ஒற்றை k-செவ்விய (k > 2) எண்ணாக n இருந்தால், அது பின்வரும் கட்டுப்பாடுகளை நிறைவு செய்ய வேண்டும்:[2]
- மிகப்பெரிய பகாக் காரணி ≥ 100129
- இரண்டாவது மிகப்பெரிய பகாக் காரணி ≥ 1009
- மூன்றாவது மிகப்பெரிய பகாக் காரணி ≥ 101
k இன்சில குறிப்பிட்ட மதிப்புகள்
செவ்விய எண்கள்
- k = 2
- σ(n) = 2n எனில் n ஆனது ஒரு செவ்விய எண்ணாகும்.
முச்செவ்விய எண்கள்
- k = 3
- σ(n) = 3n எனில் n ஆனது ஒரு முச்செவ்விய எண்ணாகும். ஆறு முச்செவ்விய எண்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன:
m என்ற ஒற்றைச் செவ்விய எண் இருக்குமானால் (தீர்வு காணப்படாத கூற்று) 2m ஆனது 3-செவ்விய எண்.
- σ(2m) = σ(2) σ(m) = 3×2m.
ஒற்றை முச்செவ்விய எண் இருந்தால், அது 1070 ஐ விடப் பெரிய வர்க்க எண்ணாக இருக்கும்; மேலும் அதற்குக் குறைந்தபட்சமாக 12 வெவ்வேறான பகாக் காரணிகள் இருக்கும்; அப்பகாக்காரணிகளுள் மிகப்பெரியது 105 ஐ விடப் பெரியதாகவும் இருக்கும்.[3]
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads