பெருந்திரட்டு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பெருந்திரட்டு என்பது தத்துவராயர் திரட்டிய ஒரு தொகுப்பு நூல். [1]

குறுந்திரட்டு

என்னும் இரண்டு நூல்கள் ஆசியர் சொரூபானந்தரின் ஆணைப்படி இவரால் திரட்டி உருவாக்கப்பட்டவை.

  • காலம் 15-ஆம் நூற்றாண்டு

பெருந்திரட்டு நூலமைதி

  • தொகுத்த தத்துவராயர் தன் ஆசிரியரின் ஆசிரியர் பெயரால் திரட்டிச் ‘சிவப்பிரகாசர் பெருந்திரட்டு’ எனப் பெயர் சூட்டியுள்ளார்.
  • நூலிலுள்ள பாடல்கள் – பாயிரம் 12, நூல் 2821, ஆக 2833 பாடல்கள்

நூல் சொல்லும் செய்திகள்

  • உலகாயதம் முதல் வேதாந்தம் ஈறாக உள்ள மதக் கோட்பாடுகளும், கண்டனமும்
  • ஞான சாதனங்கள்
  • யோக முறைமைகள்
  • குருவின் அருமை பெருமைகள்

பெருந்திரட்டு மேற்கோள் நூல்கள்

பெருந்திரட்டில் சேர்க்கப்பட்டுள்ள முன்னோர் நூல்கள்

ஞானாமிர்தம்
சிவானந்த மாலை
தத்துவ ரத்னாகரம்
தத்துவ விளக்கம்
திருவாய்மொழி
பெரிய திருமொழி
திருச்சந்த விருத்தம்
திருமாலை
பரமார்த்த தரிசனம்
திருக்களிற்றுப்படியார்
சைனத் திருநூற்றந்தாதி
தேவாரம்
திருவாசகம்
பொன்வண்ணத்தந்தாதி
திருமழிசையாழ்வாரின் சந்தவிருத்தம்

முதலானவை

இவருக்கு முன் தமிழில் வேதாந்த நூல்
  • பரமார்த்த தரிசனம் (பட்டர் மொழிபெயர்த்த பகவத் கீதை)
இவருக்குப் பின் தமிழில் வேதாந்த நூல்
  • கைவல்ய நவநீதம்
  • ஞானவாசிட்டம்

சில செய்திகள்

  • புதிய பாடல்களுக்குப் பழநூல் பெயர்களைச் சார்த்தியுள்ளார்.
  • கொள்கை மறுப்புப் பாடல்கள் இணைந்து வருகின்றன.
  • தேவாரத்துக்குப் பெயர் சூட்டியது
    • திருக்கடைக்காப்பு (சம்பந்தர் தேவாரம்)
    • தேவாரம் (அப்பர் தேவாரம்)
    • திருப்பாட்டு (சுந்தரர் தேவாரம்)

கருவிநூல்

அடிக்குறிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads