பெருவயிறு மலை
யுனெஸ்கோ உலகப் பராம்பரியக் களம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பெருவயிறு மலை (Göbekli Tepe, Turkish: [ɟœbecˈli teˈpe],[1] கோபெக்கிலி தெப்பே என்றால் துருக்கி மொழியில் பெருவயிறு மலை என்று பொருள்[2]) என்பது துருக்கியின் தென்கிழக்கு அனதோலியா பிரதேசத்தில் உள்ள ஒரு கற்காலத் தொல்பொருள் தளமாகும். இத்தளம், மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலத்தில்[3], அதாவது கி.மு. 10,000 முதல் கி.மு. 8,000 வரை, அப்பகுதி மக்களின் சமூக, சமயச் சடங்குகளுக்கான இடமாக விளங்கியது.[4] சான்லியூர்பா மாகாணத்தில் உள்ள ஓரென்சிக் நகரத்திற்கு வடகிழக்கே 12 கி.மீ. மீட்டர் தொலைவில், 15 மீட்டர் உயரமும், 300 மீட்டர் சுற்றவளவும் கூடிய பெறுவயிறு மலை, கடல் மட்டத்திலிருந்து 760 மீட்டர் உயரத்தில் உள்ளது. 2008-இல் யுனெஸ்கோ நிறுவனம் இத்தளத்தை உலகப் பராம்பரியக் களமாக அறிவித்தது.[5]
பெருவயிறு மலைத் தொல்லியல் மேட்டின் முதல் கட்டத்தில் மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (அ) காலத்தில், உலகின் முதல் பெருங்கற்காலத்திய வட்ட வடிவக் கற்தூண்கள் T வடிவத்தில் நிறுவிப்பட்டதை அகழ்வாய்வுவில் கண்டுபிடிக்கப்பட்டது.[6]
பெருவயிறு மலை தொல்லியல் களத்தில் கிடைத்த 200 கற்தூண்களில், 20 கற்தூண்கள் ஒவ்வொன்றும் 6 மீட்டர் உயரமும், 10 டன் எடையும் கொண்டுள்ளது. இக்கற்தூண்கள் ஒவ்வொன்றும் படுகைப்பாறைகளில் பொருத்தப்பட்டுள்ளது.[7]
பெருவயிறு மலையில் இரண்டாம் காலக் கட்டமானது மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (ஆ) காலத்தியதாகும். இக்காலத்திய இங்கு நிறுவப்பட்டிருந்த மெருகூட்டப்பட்ட சிறு சுண்ணாம்புக்கல் தூண்களால் நிறுவப்பட்ட அறைகளும், தரை தளங்களும் பின்னர் சிதிலமடைந்தது. பெருவயிறு மலையின் தொல்லிய மேட்டை முதலில் 1996-இல் ஜெர்மானிய தொல்லியல் அறிஞர்கள் அகழ்வாய்வு செய்தனர்.
உர்பா நகருக்கு அருகிலுள்ள சுண்ணாம்பு பீடபூமியின் மேல் "கோபெக்லி டெபே" என்று துருக்கியில் அழைக்கப்படும் மலை உச்சியில் 20 க்கும் மேற்பட்ட கல் வட்ட அடைப்புகளைக் கண்டுபிடித்தார். அவற்றில் மிகப்பெரியது 20 மீ விட்டம் கொண்டதாக இருந்தது. அதன் மையத்தில் 5.5 மீ உயரமுள்ள இரண்டு செதுக்கப்பட்ட தூண்கள் நின்று கொண்டிருந்தன. கோபெக்லி டெபே என்றால் பெருவயிறு மலை என்று துருக்கிய மொழியில் பொருள். செதுக்கப்பட்ட கல் தூண்கள் கைகள் கட்டப்பட்ட மனித உருவத்தைக் கொண்டிருந்தன. அவை 10 டன்வரை எடை கொண்டவை. அது விலங்குகள் பழக்கப்படுத்தப்படாத காலம். பாண்டங்கள் கண்டுபிடிக்கப்படாத, உலோகக் கருவிகள் இல்லாத காலம். அப்படியொரு காலத்தில் இத்தகைய பிரமாண்டமான கட்டுமானத்தை உருவாக்குவது மக்களுக்கு மிகப்பெரிய, தொழில்நுட்ப ரீதியில் சவாலாக இருந்திருக்க வேண்டும்.
2018 ஆம் ஆண்டில், யுனெஸ்கோ உலக பாரம்பரியப் பதிவேட்டில் கோபெக்லி டெபே சேர்க்கப்பட்டது. மேலும் துருக்கிய சுற்றுலாத்துறை 2019 ஆம் ஆண்டை "கோபெக்லி டெபே ஆண்டு" என்று அறிவித்தது.[8]



துருக்கி-சிரியா நாட்டின், சான்லியூர்பா மாகாணத்தில் உள்ள ஓரென்சிக் நகரத்திற்கு வடகிழக்கே 12 கி.மீ. மீட்டர் தொலைவில், 15 மீட்டர் உயரம், 300 மீட்டர் சுற்றவளவுடன் கூடிய கிமு 10,000 - கிமு 8,000 இடைப்பட்ட காலத்திய தொல்லியல் மேடு ஆகும். 2008-இல் யுனெஸ்கோ நிறுவனம் இதனை உலகப் பராம்பரியக் களமாக அறிவித்துள்ளது.
மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (அ) முதல் மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (ஆ) வரை[3] (கிமு 10,000 - கிமு 8,000) மக்கள் இத்தொல்லியல் மேட்டில், தங்களின் சமூக மற்றும் சமயச் சடங்குகள் செய்யும் இடமாகக் கொண்டிருந்தனர்.[4]
Remove ads
பெருவயிறு மலையின் தொல்பொருட்கள்
- கற்தூணில் நரியின் சிற்பம்
- பெருவயிறு மலையில் அகழ்வாய்வுப் பணிகள்
- குலக்குறிக் கம்பம், காலம் கிமு 8,800 - கிமு 8000
- பெருவயிறு மலையின் சிற்பங்களும், புடைப்புச் சிற்பங்களும்
- காட்டுப்பன்றியின் சிலை, பெருவயிறு மலை, காலம் கிமு 9,000
- வளமான பிறை பிரதேசம், கிமு 7,500
இதனையும் காண்க
அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads