பெர்சீவியரன்சு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பெர்சீவியரன்சு (Perseverance), சுருக்கமாக பெர்சி (Percy) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா நிறுவனத்தின் செவ்வாய் 2020-திட்டத்தின் ஒரு பகுதியாக செவ்வாய்க் கோளின் ஜெசிரோ குழியை ஆய்வு செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு தரையுளவி அல்லது ஆய்வூர்தி (Rover) ஆகும். இது ஜெட் புரொப்பல்சன் ஆய்வுகூடத்தினால் தயாரிக்கப்பட்டு 2020 சூலை 30 11:50 ஒ.ச.நே மணிக்கு செவ்வாயை நோக்கி ஏவப்பட்டது.[1] இக்கலம் செவ்வாயில் தரையிறங்கியது 2021 பெப்ரவரி 18 20:55 ஒ.ச.நே அளவில் உறுதிப்படுத்தப்பட்டது.[2]
பெர்சீவியரன்சு தன்னுடன் 19 ஒளிப்படக்கருவிகள், இரண்டு ஒலிவாங்கிகள் உட்பட ஏழு புதிய அறிவியல் கருவிகளை எடுத்துச் சென்றுள்ளது.[3] இஞ்சினுவிட்டி என்ற ஒரு சிறிய உலங்கு வானூர்தியையும் பெர்சீவியரன்சு எடுத்துச் சென்றுள்ளது. இவ்வுலங்குவானூர்தி வேறொரு கோளில் இயக்கப்படும் முதலாவது சோதனை-முறையிலான விண்கலமாகும்.
Remove ads
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads