பெர்ட்ராண்ட் பிக்கார்டு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பெர்ட்ராண்ட் பிக்கார்டு (Bertrand Piccard) (பிறப்பு: 1 மார்ச் 1958) சுவிட்சர்லாந்து நாட்டு மனநல மருத்துவரும் மற்றும் வான் கப்பல் (Hot air balloon) ஆராய்ச்சியாளரும் ஆவார். 1 மார்ச் 1999ஆம் ஆண்டில், பிரியன் ஜோன்ஸ் என்ற வானோடியுடன், வெப்பக் காற்று பலூனில் (Hot air balloon) (வான் கப்பல்) உலகை வலம் வந்தவர்.[1]


சுவிட்சர்லாந்து, லூசன்னா நகரில் பிறந்தவர். இவரது தாத்தா அகஸ்டி பிக்கார்ட் வான் கப்பலை ஓட்டும் கலையில் நிபுனர். இவரது தந்தை ஜாக்கியுஸ் பிக்கார்ட் ஆழ்கடல் ஆராய்ச்சியாளர்.[2]. சோலார் இம்பல்ஸ் எனும் நிறுவனத்தின் தலைவர் மற்றும் விமானி ஆவார்.
விமானியானா ஆண்ட்ரே போர்ஸ்பெர்க் உடன் இணைந்து, 13 ஆண்டு கால ஆய்வு முடிவில் எவ்வித எரிபொருள் இல்லாமல் சூரிய ஆற்றலால் மட்டுமே இயங்கும் சோலார் இம்பல்சு-2 விமானத்தை வடிவமைத்துள்ளார்.
9 மார்ச் 2015 முதல் இவ்விமானத்தை ஆண்ட்ரே போர்ஸ்பெர்க்கும் தாமும் மாற்றி மாற்றி ஓட்டி, உலகை வலம் வர, அபுதாபியிலிருந்து புறப்பட்டு, மஸ்கட், அகமதாபாத், வாரணாசி, மியான்மர், சீனா,வட அமெரிக்கா, வடஆப்பிரிக்கா அல்லது தெற்கு ஐரோப்பா நாடுகளை, அரபுக் கடல், பசிபிக் பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் மேல் பறந்து கடந்து மீண்டும் அபுதாபியில் தரையிறங்க உள்ளனர்.[3]
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads