சோலார் இம்பல்சு-2
சூரிய ஆற்றல் வானூர்தி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சோலார் இம்பல்சு-2 அல்லது சூரிய ஆற்றல் வானூர்தி-2 (Solar Impulse-2) , சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த பெர்ட்ராண்ட் பிக்கார்டு மற்றும் ஆண்ட்ரே போர்ஸ்பெர்க் ஆகிய விமானிகள் சூரிய ஆற்றலால் இயங்கும் இவ்வானூர்தியை 13 ஆண்டு கால ஆய்வு முடிவில் வடிவமைத்துள்ளனர். 2740 கிலோ கிராம் எடை கொண்ட இந்த விமானத்தில், 135 மைக்ரேன் தடுமம் (மனித தலைமுடி அளவு) எடை கொண்ட 17,248 சூரிய மின்கலத் தகடுகள் (சோலார் செல்கள்) பொருத்தப்பட்டு, அதன் மூலம் மின்சக்தி உற்பத்தி செய்து, அதனை 633 கிலோ கிராம் எடை கொண்ட நான்கு லித்தியம் பாலிமர் மின்கலங்கள் மூலம் சேமிக்கப்பட்ட மின்சாரத்தைப் பயன்படுத்தி விமானத்தின் புரோப்பல்லர்கள் எனப்படும் சுழலிகளால் எஞ்சின்கள் இயங்குகிறது.


மணிக்கு 50 முதல் 100 கி.மீ வேகத்தில் பயணிக்கும் இவ்வானூர்தி 8,500 மீட்டர் (26,000 அடி) உயரம் வரை பறக்க வல்லது. தொடர்ந்து 120 மணி நேரம் வரை இவ்விமானத்தை இயக்க முடியும். இந்த விமானத்தின் 72 மீட்டர் (236 அடி) நீள இறக்கைகளில் சூரியத் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. பகலில் சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் ஆற்றலைச் சேமித்து இவ்வானூர்தி செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பகலில் சூரிய ஒளியின் காரணமாக நிறைய மின்சாரம் கிடைக்கும் என்பதால் சோலார் இம்பல்சு வானூர்தி பகல் நேரங்களில் அதிக பட்சமாக 28 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும். இரவில் மின்சாரத்தை மிச்சப்படுத்த அதிக பட்சமாக 3000 அடி உயரத்தில் பறக்கும்.
இவ்விமானத்தில் ஒரு விமானி மட்டுமே அமரக்கூடிய வகையில் இருக்கை இருப்பதால் பெர்ட்ராண்ட் பிக்கார்டு மற்றும் ஆண்ட்ரே போர்ஸ்பெர்க் ஆகிய விமானிகள் இவ்விமானத்தை மாற்றி மாற்றி ஓட்டுகிறார்கள்.[2]. [3]. [4]
இவ்வானூர்தி 9 மார்ச் 2015, திங்களன்று அபுதாபிலிருந்து புறப்பட்டு, ஏமன் நாட்டுத் தலைநகர் மஸ்கட்டில் தரை இறங்கி, பின் அரபுக் கடல் மேல் பறந்து இந்தியா, மியான்மர், சீனா ஆகிய நாடுகளில் தங்கி பின், பசிபிக் பெருங்கடல் மேல் எங்கும் நிற்காமல் தொடர்ந்து பறந்து ஐக்கிய அமெரிக்காவில் தரையிறங்கி பின் அட்லாண்டிக் பெருங்கடல் மேல் தொடர்ந்து பறந்து, மொராக்கோ அல்லது தெற்கு ஐரோப்பா ஆகிய நாடுகளில் ஒன்றில் தங்கி, மீண்டும் புறப்பட்ட இடமான அபுதாபிக்கு திரும்பும்.
Remove ads
பயண நோக்கம்
எந்த எரிபொருளும் இல்லாமல் சூரிய ஒளி சக்தியால் மட்டுமே இயங்கும் இவ்விமானத்தின் மூலம் உலகைச் சுற்றி வந்து சாதனை படைக்கும் முயற்சியில் சோலார் இம்பல்சு-2 ஈடுபட்டுள்ளது. பசிபிக் பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதிகளில் எங்கும் நிற்காமல், நீண்ட தூரப் பயணத்திற்கான சூரிய ஆற்றல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சாதனை புரிந்திட முடியும் என்பதை உலகிற்கு தெரிவிக்கவும்; தூய்மையான தொழில்நுட்பங்கள் பற்றிய விழிப்புணர்வை பரப்பும் நோக்குடன் பயணிக்கிறது என சோலார் இம்பல்சு-2வை உருவாக்கியதாக சுவிட்சர்லாந்து நாட்டு விமானிகள் ஆண்ட்ரே போர்ஸ்பெர்க் மற்றும் பெர்ட்ராண்ட் பிக்கார்டு' கூறுகிறார்கள்.
Remove ads
பசிபிக் பெருங்கடல் பயணம்
- 30 மே 2015 அன்று நாஞ்சிங்கிலிருந்து ஹவாய்க்கு புறப்பட்ட வானூர்தி 40 மணி நேரத்திற்குப் பின் தொடர்ந்து பறக்க இயலாத அளவிற்கு வானிலை மேசமடைந்த காரணத்தால், ஜப்பான் நாட்டின் நகோயா நகர விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.[5]
- பின்னர் நாஞ்சிங்கிலிருந்து 28 சூன் 2015 அன்று புறப்பட்டு, பசிபிக் கடல் மீது தொடர்ந்து ஐந்து பகல், ஐந்து இரவு, (117 மணி 52 நிமிடங்கள்) பறந்து அமெரிக்காவின், ஹவாய் மாநிலத்தின் கலிலீயோ பன்னாட்டு விமான நிலையத்தில் 3 சூலை 2015 அன்று தரை இறங்கியது. பசிபிக் கடல் பயணத்தின் போது சோலார் இம்பல்சு விமானத்தின் மின்கலங்களில் இரண்டு அதிக வெப்பம் காரணமாக சீர்செய்ய இயலாத அளவிற்கு பழுதாகிவிட்டது.[6] எனவே சோலார் இம்பல்சு வானூர்தி ஏப்ரல் 2016 முன்னதாக ஹாவாயை விட்டுப் புறப்படாது.[6]
Remove ads
பயண நிரல்
ஆதாரங்கள்:[7]
Remove ads
சோலார் இம்பல்சு-2 வானூர்திக் குறிப்புகள்
Data from சோலார் இம்பல்சு திட்ட நிறுவனம்[41]
பொதுவான அம்சங்கள்
- அணி: 1
- நீளம்: 22.4 மீட்டர் (73.5 அடி)
- இறக்கை நீட்டம்: 71.9 மீட்டர் (236 அடி)
- உயரம்: 6.37 மீட்டர் (20.9 அடி)
- இறக்கை பரப்பு: 269.5 சதுர மீட்டர் பரப்புள்ள இறக்கைகளில், 66 கிலோ வாட் திறன் கொண்ட 17,248 சூரிய மின்கலங்கள் பொருத்தப்பட்டுள்ளது. (269.5 சதுர மீட்டர்2)
- ஏற்றப்பட்ட எடை: 2,300 கிலோ கிராம் (5,100 பவுண்டு)
- மேல் எழும்பும் வேகம் மணிக்கு 35 கி. மீ.,
செயல்திறன்
- கூடிய வேகம்: 77 kts (அதிகபட்ச வேகம் 140 கி. மீ.,) 49 kts
- பயண வேகம் : பகலில் மணிக்கு 90 கி. மீ., (இரவில் மணிக்கு 60 கி. மீ.,)
- பறப்புயர்வு எல்லை: 8,500 மீட்டர் (27,900 அடி)
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
இதனையும் காண்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads