பெ. கீதா ஜீவன்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
பெ. கீதா ஜீவன் (Periasamy Geetha Jeevan) என்பவர் தமிழக அரசியில்வாதியும் தமிழ்நாடு அரசின் முன்னாள் சமூகநலத்துறை அமைச்சரும், தற்போதைய சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சசர் ஆவார். இவர் தூத்துக்குடியில் மே 06, 1970 அன்று பிறந்தார்.[2] இவரது கணவர் சீவன் சேக்கப் ராசேந்திரன். இவர்களுக்கு மகிழ் யான் சந்தோசு என்ற மகனும், சீனா எபி சுந்தரி என்ற மகளும் உள்ளனர்.[3]
இவர் தூத்துக்குடியில் ஆங்கிலவழிக் கல்வியளிக்கும் ஒரு பள்ளிக்கூடத்தின் தாளாளராக இருந்து வருகிறார். இவர் தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளரும், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என். பெரியசாமியின் மகள் ஆவார். இவர் இதற்கு முன்பாக 1996 முதல் 2001 வரை உள்ளாட்சி அமைப்புத் தேர்தலில், தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்வுச் செய்யப்பட்டு பணியாற்றியுள்ளார்.2006 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டு தமிழக சட்டமன்றத்தில் இடம்பெற்றார். பின்னர் 2016ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், திமுக கட்சியின் சார்பாக தூத்துக்குடி தொகுதியிலிருந்து, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4] 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கபட்டார். இதையடுத்து 2021 மே 7 அன்று தமிழக சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சசராக பதவியேற்றார்.[5]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads