பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005
இந்திய நாடாளுமன்ற சட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005 (Disaster Management Act, 2005) என்பது இந்தியாவில், 2004 ஆம் ஆண்டில் சுனாமியால் ஏற்பட்ட எண்ணற்ற உயிர்ப்பலிகளையும், பொருட்சேதங்களை கணக்கில் கொண்டு, இந்தியாவில் பேரிடர் காலங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்திய நாடாளுமன்றம் 2005-இல் இச்சட்டத்தை இயற்றியது.[1][2] 9 சனவரி 2006-இல் இச்சட்டம் நடைமுறைக்கு வந்தது. இச்சட்டத்தின் கீழ் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் நிறுவப்பட்டது.
Remove ads
தேசிய பேரிடர் மேலாணமை ஆணையம்
இச்சட்டத்தின் பிரிவு -3 (1)-இன் கீழ், 27 செப்டம்பர் 2006-இல் நிறுவப்பட்ட தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின்[3] தலைவராக இந்தியப் பிரதமரும் மற்றும் துணைத்தலைவர் உள்ளிட்ட 9 உறுப்பினர்களும் இருப்பர்.[4] இந்த உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.[5]
இச்சட்டத்தின் பிரிவு 6-இன் கீழ் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் கொள்கை வகுத்தல், திட்டமிடல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கும்.[1]
தேசிய செயற்குழு
இச்சட்டத்தின் பிரிவு 8-இன் கீழ் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு உதவிட இந்திய அரசின், உள்துறை அமைச்சக செயலர் தலைமையில் வேளாண்மை, இராணுவம், குடிநீர் வழங்கல், சுற்றுச் சூழல் மற்றும் வனம், நிதி, சுகாதாரம், எரிசக்தி, மின்சாரம், ஊரக வளர்ச்சி, அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், தொலைத்தொடர்பு அமைச்சகங்களின் இந்திய ஆட்சிப் பணி செயலாளர்கள் கொண்ட தேசிய செயற்குழு உள்ளது.[1] ஆண்டுதோறும் இந்திய அளவில் பேரிடர் மேலாண்மை குறித்த திட்டமிடுவது, இச்செயற்குழுவின் பணியாகும்.[1][2][6]
Remove ads
மாநில அளவிலான பேரிடர் மேலாண்மை ஆணையம்
இச்சட்டத்தின் பிரிவு 22-இன் கீழ் இந்திய மாநிலங்கள் அளவில் முதலமைச்சர்கள் தலைமையில் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் செயல்படும். மாநில பேரிடர் ஆணையத்தின் உறுப்பினர்களாக மாநில அமைச்சர்கள் இருப்பர். மாநில ஆணையத்திற்கு உதவிட மாநிலத் துறைகளின் அரசுச் செயலாளர்களின் செயற்குழு செயல்படும்.[1]
மாவட்ட அளவிலான பேரிடர் மேலாண்மைக் குழு
இச்சட்டத்தின் பிரிவு 25-இன் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் பேரிடர் மேலாண்மைக் குழு செயல்படும். மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட பேரிடர் ஆணையக் குழுவில் உறுப்பினர்களாக இருப்பர்.
தேசியப் பேரிடர் மீட்புப் படை (NDRF)
இச்சட்டத்தின் பிரிவு 44–45 கீழ் இந்திய அரசு நியமிக்கும் தலைமை இயக்குநர் தலைமையில் பல்துறை நிபுணர்கள் கொண்ட தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனம் செயல்படும்.[1] செப்டம்பர், 2014-இல் காசுமீர் எல்லைப்புறத்தில் ஏற்பட்ட பெருமழை வெள்ளத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படை ஆற்றிய பணி இந்திய அரசு விருது வழங்கியது.
சட்டத்தின் பிற அம்சங்கள்
1995-இல் நிறுவப்பட்ட தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் இச்சட்டத்தின் பிரிவு 42-இன் கீழ் இயங்கும்.[7]
சட்டம் தொடர்பான விமர்சனங்கள்
பேரிடர் மேலாண்மை ஆணையங்களில் அதிகார வர்க்கத்தினர் மட்டுமே உறுப்பினர்களாக கொண்டுள்ளனர் என்றும், பொதுத்தொண்டு நிறுவனங்களுக்கு இடமளிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் உள்ளது.[7]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads