பொகாரோ எஃகு நகரத் தொடருந்து நிலையம்

From Wikipedia, the free encyclopedia

பொகாரோ எஃகு நகரத் தொடருந்து நிலையம்map
Remove ads


பொகாரோ எஃகு நகரத் தொடருந்து நிலையம் (Bokaro Steel City railway station)(நிலையக் குறியீடு:- BKSC ) என்பது தென்கிழக்கு இரயில்வேயின் ஆத்ரா பிரிவின் கீழ் கோமோ-முரி மற்றும் அட்ரா-பொகாரோ எஃகு நகரக் கிளைப் பாதையில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது இந்தியாவின் சார்கண்டு மாநிலத்தில் பொகாரோ மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது ஜாரியா தங்கச் சுரங்கத்தின் விளிம்பில் அமைந்துள்ளது. இந்நிலையம் பொகாரோ எஃகு நகரம் மற்றும் சுற்றியுள்ள சுரங்க-தொழில்துறை பகுதிக்குச் சேவை செய்கிறது.

விரைவான உண்மைகள் பொகாரோ எஃகு நகரம், பொது தகவல்கள் ...
Remove ads

வரலாறு

இந்த தொடருந்து நிலையம் மற்றும் இதைச் சுற்றியுள்ள பகுதிகள் முன்பு அசாரிபாக் மாவட்டத்தில் உள்ள மராபரி என்று அழைக்கப்பட்டன. சுற்றியுள்ள பகுதிகள் இன்றும் மராபாரி என்று அழைக்கப்படுகின்றன. பொகாரோ எக்கு ஆலையின் கட்டுமானத்துடன், தொடருந்து நிலையம் பொகாரோ எக்கு நகரத் தொடருந்து நிலையம் என மறுபெயரிடப்பட்டது.[1][2]

இப்பகுதியில் முன்னர் அமைக்கப்பட்ட இரயில் பாதைகளில் 1906-இல் திறக்கப்பட்ட கிழக்கிந்திய இரயில்வே நிறுவனத்தின் முக்கிய பாதையில் இது அமைந்துள்ளது. கோமோ மற்றும் பர்ககானா இடையே நிலக்கரி சுரங்கத்திற்காக இந்நிலையம் தொடங்கப்பட்டது.[3] 1927-இல் கோமோ-பர்ககானா பாதை செயல்பாட்டில் வந்தது. வங்காள நாக்பூர் இரயில்வே நாக்பூரிலிருந்து அசன்சோல் வரை பாதையை உருவாக்கி 1891-இல் சரக்கு போக்குவரத்தினைத் தொடங்கியது.[4] இந்த பாதை 1907-இல் கோமோக் வரை பின்னர் நீட்டிக்கப்பட்டது. மொகூடா-சந்திரபுர இணைப்பு[4] 1913-இல் செயல்பாட்டில் வந்தது.

143 கிலோமீட்டர்கள் (89 mi) நீளமான சந்திரபுரா-முரி-ராஞ்சி-ஹாட்டியா பாதை 1957-இல் தொடங்கப்பட்டு 1961-இல் நிறைவடைந்தது.[5]

Remove ads

தூரம்

பொகாரோ எக்கு நகரத் தொடருந்து நிலையத்திலிருந்து நகர மையப்பகுதிக்குப் பயணிக்க 20 நிமிடங்கள் ஆகும். பொகாரோ எக்கு நகர தொடருந்து நிலையம் மற்றும் நகர மையத்திற்கிடையே பயண தூரம் 20 கி.மீ.

மின்மயமாக்கல்

பொகாரோ பகுதியில் உள்ள ரயில் பாதைகள் (பொகாரோ எக்கு நகர் உட்பட) 1986-89-இல் மின் மயமாக்கப்பட்டன.[6]

  • பொகாரோ எக்கு நகரத் தொடருந்து நிலையத்தில் 5 இரட்டை படுக்கைகள் கொண்ட ஓய்வு அறைகள் மற்றும் நான்கு படுக்கைகள் கொண்ட தங்குமிடம் உள்ளது.
  • நடைபாதை 1-இல், இந்தியத் தொடருந்து கழகத்தின் புதிய உணவு நிலையம் உள்ளது. [7]
  • பொகாரோ நிலையத்தில் முழுமையாக குளிரூட்டப்பட்ட மேல் வகுப்பு காத்திருப்பு கூடம் மற்றும் நடைபாதை எண்.1-இல் சாதாரண இரண்டாம் வகுப்பு காத்திருப்பு கூடம் உள்ளது.
  • நடைபாதை எண்.1ல் சைவ மற்றும் அசைவ உணவகம்.
  • நடைபாதை எண்.1க்கு அருகில் உள்ள சரக்கு முனையம்
  • அனைத்து தளங்களிலும் திறன் பேசி சார்ஜிங் வசதி.
  • அனைத்து தளங்களிலும் குளிர்ந்த நீர் வசதி

தொடருந்து

விரைவு தொடருந்து

  • 20839/40 ராஞ்சி ராஜதானி விரைவுவண்டி
  • 22823/24 புவனேஸ்வர் ராஜதானி விரைவுவண்டி
  • 12019/20 ஹவுரா-ராஞ்சி சதாப்தி விரைவுவண்டி
  • 12831/32 தன்பாத்-புவனேஸ்வர் கரிப் ரத் விரைவுவண்டி
  • 02832/31 புவனேசுவரம் - தன்பாத் சிறப்பு விரைவுவண்டி
  • 12365/66 ராஞ்சி-பாட்னா ஜன சதாப்தி விரைவுத் தொடருந்து
  • 12801/02 பூரி-புது தில்லி புருசோத்தம் விரைவுவண்டி
  • 12875/76 பூரி-தில்லி ஆனந்த் விஹார் நீலாச்சல் எக்ஸ்பிரஸ்
  • 22805/06 புவனேசுவரம்-புது தில்லி விரைவுவண்டி
  • 13351/52 தன்பாத்-ஆலப்புழா விரைவுவண்டி
  • 18103/04 டாடாநகர்-அமிர்தசரசு ஜாலியன் வாலாபாக் விரைவுவண்டி
  • 12817/18 ஹதியா-டெல்லி ஆனந்த் விஹார் டெர்மினல் ஜார்கண்ட் ஸ்வர்ண ஜெயந்தி விரைவுவண்டி
  • 12825/26 ராஞ்சி-புது தில்லி ஜார்க்கண்ட் சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி
  • 12365/66 பாட்னா-ராஞ்சி ஜன் சதாப்தி விரைவுவண்டி
  • 17005/06 ரக்சால்-ஹைதராபாத் விரைவுவண்டி
  • 17007/08 தர்பங்கா-செகந்திராபாத் விரைவுவண்டி
  • 18609/10 ராஞ்சி-மும்பை eல். டி. டி. விரைவுவண்டி
  • 18621/22 ஹதியா-பாட்னா பாட்லிபுத்ரா விரைவுவண்டி
  • 18623/24 ஹதியா–பாட்னா–இஸ்லாம்பூர் விரைவுவண்டி
  • 18625/26 ஹதியா–பாட்னா–பூர்னியா கோர்ட் விரைவுவண்டி
  • 18627/28 ராஞ்சி-ஹவுரா நகரிடை விரைவுவண்டி
  • 15027/28 ஹதியா-கோரக்பூர் மௌரியா விரைவுவண்டி
  • 03357/58 தன்பாத் - கோயம்புத்தூர் விரைவுவண்டி
  • 18618/19 ராஞ்சி-கோடா இன்டர்சிட்டி விரைவுவண்டி
  • 15660/61 காமாக்யா-ராஞ்சி விரைவுவண்டி
  • 13425/26 சூரத்-மால்டா நகர விரைவுவண்டி
  • 13303/04 தன்பாத்-ராஞ்சி நகரிடை விரைவுவண்டி
  • 13403/04 ராஞ்சி-பாகல்பூர் வனஞ்சல் விரைவுவண்டி
  • 18603/04 ராஞ்சி-பாகல்பூர் விரைவுவண்டி
  • 18605/06 ராஞ்சி-ஜெய்நகர் விரைவுவண்டி
  • 13319/20 தும்கா-ராஞ்சி இன்டர்சிட்டி விரைவுவண்டி
  • 18019/20 ஜார்கிராம் - தன்பாத் மெமு விரைவுவண்டி

பயணிகள் ரயில்

  • 58014/15 பொகாரோ எஃகு நகர-ஹவுரா விரைவு பயணிகள் வண்டி
  • 63591/92 பொகாரோ எஃகு நகர-அசன்சோல் மெமு
  • 63595/96 பொகாரோ எஃகு நகர-அசன்சோல் மெமு
  • 58033/34 பொகாரோ எஃகு நகர-ராஞ்சி பயணிகள் வண்டி
  • 53341/42 தன்பாத்-முரி வண்டி
  • 68019/20 ஜார்கிராம்-சந்திரபுரா மெமு
  • 53061/62 பர்தாமன்-ஹதியா பயணிகள் வண்டி
  • 53335/36 தன்பாத்-ராஞ்சி பயணிகள் வண்டி
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads