சார்க்கண்டு

இந்திய மாநிலம் From Wikipedia, the free encyclopedia

சார்க்கண்டு
Remove ads

ஜார்க்கண்டு (Hindi: झारखण्ड, சந்தாளி மொழி:ᱡᱷᱟᱨᱠᱷᱚᱸᱰ, Urdu: جھارکھنڈ) இந்தியாவின் மாநிலங்களில் ஒன்று. 2000ஆம் ஆண்டில் பீகார் மாநிலத்திலிருந்து ஒரு பகுதி பிரித்தெடுக்கப்பட்டு சார்க்கண்டுமாநிலம் உருவாக்கப் பட்டது. ராஞ்சி சார்க்கண்டு மாநிலத்தின் தலைநகராகும். ஜாம்ஷெட்பூர் (பெரிய நகரம்), பொகாரோ மற்ற முக்கிய நகரங்கள். சார்க்கண்டின் அருகில் பீகார், மேற்கு வங்காளம், ஒரிசா, சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன. சார்க்கண்டுகனிம வளம் நிறைந்த மாநிலமாகும். ஜார்க்கண்டு என்பதன் பொருள் காடுகளைக் கொண்ட நிலப்பரப்பு என்பதாகும்.

விரைவான உண்மைகள் சார்க்கண்டு, நாடு ...
Remove ads

பொருளாதாரம்

சார்க்கண்டு மாநிலத்தின் முக்கிய பொருளாதார ஆதாரங்களாக இரும்பு, நிலக்கரி, அலுமினியம் போன்ற கனிமச் சுரங்கங்கள் அதிகமாக உள்ளது.

நிர்வாகம்

Thumb
கோட்டங்களும்மாவட்டங்களும்

79,716 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சார்க்கண்டு மாநிலத்தை நிர்வாக வசதிக்காக பாலமூ கோட்டம், வடக்கு சோட்டாநாக்பூர் கோட்டம், தெற்கு சோட்டாநாக்பூர் கோட்டம், கொல்கான் கோட்டம், சாந்தல் பர்கனா கோட்டம் என ஐந்து கோட்டங்களாக பிரிக்கப்பட்டு, மாநிலத்தின் இருபத்து நான்கு மாவட்டங்கள் கோட்டங்களின் பகுதியாக இயங்குகிறது.

பலாமூ கோட்டம்

பாலமூ கோட்டத்தில் காட்வா மாவட்டம். பலாமூ மாவட்டம், லாத்தேஹார் மாவட்டம் என மூன்று மாவட்டங்களை கொண்டது.

வடக்கு சோட்டாநாக்பூர் கோட்டம்

வடக்கு சோட்டாநாக்பூர் கோட்டத்தில் சத்ரா மாவட்டம், ஹசாரிபாக் மாவட்டம், கிரீடீஹ் மாவட்டம், கோடர்மா மாவட்டம், தன்பாத் மாவட்டம், போகாரோ மாவட்டம் மற்றும் ராம்கர் மாவட்டம் என ஏழு மாவட்டங்களை கொண்டுள்ளது.

தெற்கு சோட்டாநாக்பூர் கோட்டம்

தெற்கு சோட்டாநாக்பூர் கோட்டத்தில் ராஞ்சி மாவட்டம், லோஹர்தக்கா மாவட்டம், கும்லா மாவட்டம், சிம்டேகா மாவட்டம், மேற்கு சிங்பூம் மாவட்டம், மற்றும் குந்தி மாவட்டம் என ஐந்து மாவட்டங்களை கொண்டுள்ளது.

கொல்கான் கோட்டம்

கொல்கான் கோட்டத்தில் மேற்கு சிங்பூம் மாவட்டம், சராய்கேலா கர்சாவான் மாவட்டம் மற்றும் கிழக்கு சிங்பூம் மாவட்டம் என மூன்று மாவட்டங்கள் உள்ளது.

சாந்தல் பர்கனா கோட்டம்

சாந்தல் பர்கனா கோட்டத்தில் தேவ்கர் மாவட்டம், ஜாம்தாடா மாவட்டம், தும்கா மாவட்டம், கோடா மாவட்டம், பாகுட் மாவட்டம், மற்றும் சாகிப்கஞ்சு மாவட்டம் என ஆறு மாவட்டங்கள் உள்ளது.

Remove ads

போக்குவரத்து

தரைவழி போக்குவரத்து

தேசிய நெடுஞ்சாலை 31, தேசிய நெடுஞ்சாலை 2, தேசிய நெடுஞ்சாலை 6, மற்றும் தேசிய நெடுஞ்சாலை எண்கள் 23, 32, 33, 75, 78, 80, 98, 99, 100 மற்றும் 139 ஆகியவைகள் நாட்டின் அனைத்து பகுதிகளுடன் தரைவழியாக இணைக்கிறது.

தொடருந்து

சார்க்கண்டு மாநிலத் தலைநகர் ராஞ்சியிலிருந்து இந்தியாவின் அனைத்து நகரங்களையும் இணைக்கும் தொடருந்து நிலையம் அமைந்துள்ளது.[7]

வானூர்தி நிலையங்கள்

பிர்ச முண்டா பன்னாட்டு விமான நிலையம், ராஞ்சி[8], ஜம்செட்பூர் விமான நிலையம், தன்பாத் விமான நிலையம், சகுலியா விமான நிலையம், பொகாரோ விமான நிலையங்கள் இந்தியாவின் அனைத்து நகரங்களுடன் வான் வழியாக இணைக்கிறது.[9]

மக்கள் வகைப்பாடு

மொத்த மக்கள் தொகையில் பட்டியல் பழங்குடி மக்கள் 28% ஆகவும், பட்டியல் சமூக மக்கள் 12% ஆகவும் உள்ளனர்.

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 32,988,134 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 32,988,134 மற்றும் பெண்கள் 16,930,315 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 948 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 414 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 66.41% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு76.8% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 55.42% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5,389,495 ஆக உள்ளது. [10]

சமயம்

பழங்குடி இன மக்கள் அதிகமாக வாழும் இம்மாநிலத்தில், இந்து சமயத்தவரின் மக்கள்தொகை 22,376,051 (67.83%) ஆகவும், இசுலாமியர் மக்கள்தொகை 4,793,994 (14.53%) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள்தொகை 1,418,608 (4.30 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள்தொகை 71,422 (0.22%) ஆகவும், சமண சமய மக்கள்தொகை 14,974 (0.05 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 8,956 (0.03%) ஆகவும், பிற சமயத்து மக்கள்தொகை 4,235,786 ( 12.84%) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள்தொகை 68,343 (0.21%) ஆகவும் உள்ளது.

Remove ads

அரசியல்

Thumb
சட்டமன்ற தொகுதிகள்

சட்டமன்ற தொகுதிகள்

எண்பத்து ஒன்று சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட சார்க்கண்டு மாநிலத்தில், மொத்தமுள்ள எண்பத்து ஒன்று சட்டமன்ற தொகுதிகளில், பட்டியல் பழங்குடி மக்களுக்கு-ST 27 தொகுதிளும், பட்டியல் சமூகத்திற்கு 9 தொகுதிகளும், பொதுப்பிரிவினருக்கு 45 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.[11]

Thumb
நாடாளுமன்ற தொகுதிகள்

நாடாளுமன்ற தொகுதிகள்

பதின்நான்கு மக்களவை தொகுதிகளில் பட்டியல் பழங்குடி மக்களுக்கு-ST 5 தொகுதிகளும், பட்டியல் சமூகத்திற்கு 1 தொகுதியும், பொதுப்பிரிவினருக்கு 8 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.[11]

Remove ads

மாநிலப் பிரச்சனைகள்

சார்க்கண்டு மாநிலம் நக்சலைட்-மாவோயிஸ்ட் போராளிகளின் சிவப்பு தாழ்வாரமாக உள்ளது. 1967ஆம் ஆண்டில் இப்பகுதியில் போராளிகளுக்கும்-மாநில காவல்துறையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 6,000 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.[12]

சுற்றுலாத் தலங்கள்

கசாரிபாக் தேசியப் பூங்கா மற்றும் டாட்டா ஸ்டீல் விலங்கு காட்சிச்சாலை ஆகும்.

மாநிலத்தின் புகழ் பெற்றவர்கள்

  1. மகேந்திரசிங் தோனி
  2. கரிய முண்டா
  3. சிபு சோரன்
  4. சுதர்சன் பகத்
  5. சுனில் குமார் சிங்
  6. ஜெயந்த் சின்ஹா
  7. நிசிகாந்த் துபே
  8. பசுபதி நாத் சிங்
  9. பித்யூத் பரன் மத்தோ
  10. மது கோடா
  11. ரகுபர் தாசு
  12. ரவீந்திர குமார் பாண்டே
  13. ரவீந்திர குமார் ராய்
  14. ராம் தகல் சவுத்ரி
  15. லட்சுமண் கிலுவா
  16. விஜய் குமார் ஹன்ஸ்தக்
  17. விஷ்ணு தயாள் ராம்
  18. ஹேமந்த் சோரன்

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads