பொடா-பொடா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பொடா-பொடா என்பது கிழக்கு ஆப்பிரிக்காவில் பயன்படுத்தப்படும் வாடகை மிதிவண்டிகளைக் குறிக்கும். மிதிவண்டி ஓட்டுபவர்களும் இவ்வாறு அழைக்கப்படுவதுண்டு.



தோற்றம்
பொடா-பொடா வண்டிகள் 1960, 1970களில் இருந்து பயன்பாட்டில் இருக்கின்றன. இதன் பயன்பாடு கென்ய-உகாண்டா எல்லைப் பகுதியில் துவங்கியது. எல்லையைக் கடப்பதற்காக இது முதன்மையாகப் பயன்படுத்தப்பட்டது. ஈருருளி (மிதிவண்டி) ஓட்டுனர்கள் வாடிக்கையாளர்களை நோக்கி எல்லை விட்டு எல்லை எனப் பொருள் தரும் ஆங்கிலச் சொல்லான பார்டர் என்பதை பார்டர்-பார்டர் (Border-to-Border) என்று அழைப்பர். பின்னர் இது மருவி பொடா-பொடா ஆனது.
பயன்பாடு
பொருட்களையும் ஆட்களையும் கொண்டுசெல்ல இங்கு மிதிவண்டிகளைப் பயன்படுத்துகின்றனர். இந்த மிதிவண்டிகளின் இருக்கைகளும் பின்னிருக்கைகளும் நன்கு பஞ்சு வைத்துத் தைக்கப்பட்டிருக்கும். விலைகுறைவான இம்மிதிவண்டிகள் ஆசியாவில் பயன்படுத்தப்படும் மூன்று சக்கர மிதிவண்டிகளைக் காட்டிலும் விலை குறைந்தவை. ஓட்டுவதற்கும் எளிதானவை. 2004ஆம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பின் படி மொத்தம் 200,000 ஆண்கள் மிதிவண்டி பொடா-பொடாவில் வேலை செய்வதாக கணக்கெடுக்கப் பட்டுள்ளது.
Remove ads
மாற்றாக மோட்டார் வண்டிகள்
தற்காலத்தில் மோட்டார் வண்டிகள் இச்சேவைக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இதுவும் பொடா பொடா என்றே அழைக்கப்படுகிறது. எனினும் உகாண்டாவின் பெரும்பாலான பகுதிகளில் மோட்டார் வண்டி எனப்பொருள் தரும் பிக்கி-பிக்கி என்ற சுவாகிலி மொழிச்சொல்லே பயன்படுத்தப் படுகிறது. இவை நைசீரியாவில் ஒக்காடா அல்லது அச்சாபா என்று அழைக்கப்படுகின்றன.
மின்வழிச் சேவை
2014-ஆம் முதல் இந்த மோட்டார் சைக்கிள் சேவை ஊபர் போன்ற நிறுவனங்களால் அலைபேசிச் செயலிகள் மூலமும் வழங்கப்படுகிறது.
படத்தொகுப்பு
- உகாண்டாவில் A109 சாலையில் ஓரிடத்தில்
- கென்யாவில் உள்ள ஒரு தகவமைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்
- உருவாண்டாவில் ஒரு பொடா-பொடா
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads