பொட்டாசியம் ஐதரைடு

வேதியல் சேர்மம் From Wikipedia, the free encyclopedia

பொட்டாசியம் ஐதரைடு
Remove ads

பொட்டாசியம் ஐதரைடு (Potassium hydride) என்பது KH என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பொட்டாசியம் மற்றும் ஐதரசன் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் வெண்மை நிறத் திண்மமாகவும் வணிக மாதிரிகள் சாம்பல் நிறத்திலும் காணப்படுகின்றன. வலிமையான காரமாகிய பொட்டாசியம் ஐதரைடு தீவிரமாகவும் அபாயகரமாகவும் வினைபுரியும் தன்மையைக் கொண்டுள்ளது. கரிமத் தொகுப்பு வினைகளில் மிகவும் பயனுள்ளதாக விளங்கும் இதை கனிம எண்ணெயின் நீர்மக் குழம்பு (~35%) அல்லது சிலசமயங்களில் பாரஃபின் மெழுகு என்ற வணிகப் பெயர்களில் விற்பனை செய்கிறார்கள்.[3]

விரைவான உண்மைகள் இனங்காட்டிகள், பண்புகள் ...
Remove ads

தயாரிப்பு

பொட்டாசியம் மற்றும் ஐதரசன் இரண்டும் நேரடியாக வினைபுரிந்து பொட்டாசியம் ஐதரைடு உருவாகிறது.

2 K + H2 → 2 KH

1807 ஆம் ஆண்டில் அம்பரி டேவி பொட்டாசியத்தைக் கண்டறிந்த பின்னர் சிலநாட்களிலேயே இவ்வினையைக் கண்டறிந்தார். ஐதரசன் சூழலில் கொதிநிலைக்குச் சற்று குறைவாக பொட்டாசியத்தைச் சூடாக்கும் போது இவ்வினை நிகழ்வதை அவர் கண்டறிந்தார்[4]:p.25.

பொட்டாசியம் ஐதரைடு கரிமக் கரைப்பான்களில் கரைவதில்லை,[5] ஆனால் உருகிய சோடியம் ஐதராக்சைடு போன்ற உருகிய ஐதராக்சைடு மற்றும் உப்புக் கலவைகளில் கரைகிறது.

Remove ads

பயன்கள்

பொட்டாசியம் ஐதரைடு தண்ணீருடன் வினைபுரிந்து பொட்டாசியம் ஐதராக்சைடு மற்றும் ஐதரசன் வாயுவைக் கொடுக்கிறது.

KH + H2O → KOH + H2

சோடியம் ஐதரைடை விட பொட்டாசியம் ஐதரைடு வலிமையான காரமாக இருக்கிறது. குறிப்பிட்ட வகை கார்பனயில் சேர்மங்கள் மற்றும் அமீன்களில் புரோட்டான் நீக்கம் செய்து ஈனோலேட்டுகள் மற்றும் அமைடுகள் உருவாக்குவதில் பொட்டாசியம் ஐதரைடு பயன்படுத்தப்படுகிறது.[6]

பாதுகாப்பு

பொட்டாசியம் ஐதரைடு காற்றில் தீப்பற்றும் இயல்புடையது. அமிலங்களுடன் தீவிரமாக வினைபுரியக்கூடியது. ஆக்சிசன் உட்பட ஆக்சிசனேற்றிகளுடன் தொடர்பு கொள்ள நேர்ந்தாலேயே தீப்பற்றும் தன்மை கொண்டது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads