சீசியம் ஐதரைடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சீசியம் ஐதரைடு (Caesium hydride) CsH என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இந்தக் கார உலோக ஐதரைடு சீசியமும் ஐதரசனும் சேர்ந்து வினைபுரிவதால் உருவாகிறது [2]. உலோக ஆவியில் ஒளி-தூண்டல் துகள் உருவாக்கத்தால் தயாரிக்கப்பட்ட முதலாவது பொருள் சீசியம் ஐதரைடு ஆகும். சீசியத்தைப் பயன்படுத்தி அயனி உந்துவிசை அமைப்பு செயல்படுத்துவது தொடர்பான ஆரம்பகால ஆய்வுகளில் சீசியம் ஐதரைடு பெரிதும் பயன்பட்டது.
சீசியம் ஐதரைடில் உள்ள சிசியம் அணுக்கருவை, சுழற்சி-பரிமாற்ற ஒளியியக்க ஏற்றல் செயல்முறையின் வழியாக ஏற்றப்பட்ட ஒளியியக்க சீசிய ஆவியுடன் இடைவினை புரியச் செய்தால் அதை மிகை முனைவாக்கம் செய்யலாம். சுழற்சி-பரிமாற்ற ஒளியியக்க ஏற்றல் செயல்முறை சீசியம் அணுக்கருவின் அணுக்கருக்களின் காந்த ஒத்ததிர்வு சமிக்ஞையை அதிகரிக்கச் செய்யும் [3].
Remove ads
படிகக் கட்டமைப்பு
அறை வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் சீசியம் ஐதரைடு சோடியம் குளோரைடின் கட்டமைப்பையே ஒத்திருக்கிறது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads