பொட்டாசியம் நைட்ரைடு
வேதிச் சேர்மம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பொட்டாசியம் நைட்ரைடு (Potassium nitride) என்பது K3N என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஒரு நிலையற்ற இரசாயன சேர்மமாக இருப்பதால் 19 ஆம் நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்ட பல தயாரிப்பு முறை முடிவுகள் தவறாகக் கூறப்பட்டன. 1894 ஆம் ஆண்டில் இப்படி ஒரு சேர்மம் இல்லை என்றும் கருதப்பட்டது.[2]
எனினும் 2004 ஆம் ஆண்டில் இந்த சேர்மம் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. 233 கெல்வின் வெப்பநிலைக்கு கீழ் இதன் கட்டமைப்பு தைட்டானியம் அயோடைடு கட்டமைப்புக்கு எதிராக இருந்ததாகவும் அறியப்பட்டது. Li3P- வகை கட்டமைப்பு மிகவும் நிலையானதாக இருக்கும் என்றும் கருதப்பட்டது. இந்த வெப்பநிலைக்கு மேல் பொட்டாசியம் நைட்ரைடு செஞ்சாய்சதுர கட்டமைப்புக்கு மாறுகிறது.
வெற்றிடத்தில் 77 கெல்வின் வெப்பநிலையில் பொட்டாசியம் உலோகமும் நீர்ம நைட்ரசனும் வினை புரிந்தால் பொட்டாசியம் நைட்ரைடு உருவாகும்.:[1]
- 6K + N2 → 2K3N
அறைவெப்பநிலையில் இச்சேர்மம் மீண்டும் பொட்டாசியம் மற்றும் நைட்ரசனாக சிதைவடைகிறது.
கொள்ளிடத்தடை காரணமாக பொட்டாசியம் நைட்ரைடு நிலைப்புத்தன்மை இல்லாமல் காணப்படுகிறது..
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads