பொட்டாசியம் பைசல்பேட்டு

From Wikipedia, the free encyclopedia

பொட்டாசியம் பைசல்பேட்டு
Remove ads

பொட்டாசியம் பைசல்பேட்டு (Potassium bisulphate) என்பது KHSO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கந்தக அமிலத்தினுடைய பொட்டாசியம் அமில உப்பாக இது கருதப்படுகிறது.

விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
Remove ads

இயற்கைத் தோற்றம்

மெர்காலைட்டு என்ற கனிம வடிவ பொட்டாசியம் பைசல்பேட்டு மிக அரிதாகத் தோன்றுகிறது. மிசெனைட்டு என்ற சிக்கலான கனிம வடிவத்திலும் பொட்டாசியம் பைசல்பேட்டு காணப்படுவதுண்டு.

தயாரிப்பு

கந்தக அமிலத்தை சம அளவு மோலார் அடர்த்தியுள்ள பொட்டாசியம் ஐதராக்சைடுடன் சேர்த்து நடுநிலையாக்கல் வினைக்கு உட்படுத்தினால் பொட்டாசியம் பைசல்பேட்டு உருவாகிறது [1]

H2SO4 + KOH → KHSO4 + H2O

கந்தக அமிலத்துடன் பொட்டாசியம் சல்பேட்டுடன் சேர்த்து வினைபுரியச் செய்வதாலும் பொட்டாசியம் பைசல்பேட்டு உருவாகிறது:[2]

H2SO4 + K2SO4 → 2 KHSO4

பொட்டாசியம் நைட்ரேட்டிலிருந்து நைட்ரிக் அமிலம் தயாரிக்கும் வினையில் முக்கியமான உடன் விளைபொருளாகவும் பொட்டாசியம் பைசல்பேட்டு உருவாகிறது:[3]

KNO3 + H2SO4 → KHSO4 + HNO3
Remove ads

வேதிப்பண்புகள்

பொட்டாசியம் பைசல்பேட்டு வெப்பச்சிதைவு அடைவதால் பொட்டாசியம் பைரோசல்பேட்டும் தண்ணீரும் உருவாகின்றன[2]

2 KHSO4 → K2S2O7 + H2O

Temperatures above 600 °செல்சியசு வெப்பநிலைக்கு மேல் பொட்டாசியம் பைசல்பேட்டு சிதைவடைந்து பொட்டாசியம் சல்பேட்டையும் கந்தக மூவாக்சைடையும் உருவாக்குகிறது. :[4]

2 KHSO4 → K2SO4 + SO3 + H2O

பயன்கள்

பொட்டாசியம் பைசல்பேட்டு பகுப்பாய்வு வேதியியலில் ஒரு சிதைக்கும் முகவராகப் பயன்படுத்தப்படுகிறது அல்லது பொட்டாசியம் பெர்சல்பெட்டு என்ற வலிமையான ஆக்சிசனேற்றி தயாரிப்பில் ஒரு முன்னோடிச் சேர்மமாகப் பயன்படுகிறது[5] .

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads