பொம்பெயி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பொம்பெயி மாநகரமானது இன்றைய இத்தாலி நாட்டின் நேபிள்ஸ் நகரத்திலிருந்து, தென் கிழக்குப் பகுதியில் சுமார் 23 கிலோமீட்டர் தொலைவில் அமைந்த பண்டைய நகரம் ஆகும். கிபி 79-இல் வெசூவியஸ் எரிமலை வெடிப்பின் காரணமாக வெளியான எரிமலைச் சாம்பல் மற்றும் இறுகிய தீக்குழம்புகளினுள் அகப்பட்டு பொம்பெயி நகரம் 4 முதல் 6 மீற்றர் வரை புதையுண்டு போனது. அதன் பின்னர் கிட்டத்தட்ட 18 ஆம் நூற்றாண்டளவிலான காலப்பகுதி வரையில் அதாவது 1749 ஆம் ஆண்டு தற்செயலாகக் கண்டறியப்படும் வரையில் இந்நகரம் தொலைந்து போயிருந்தது. அதன் பின்னர் நடந்த ஆய்வுகள் உரோமப் பேரரசு மிக உயர்வான நிலையிலிருந்த காலப்பகுதியில் மக்களின் வாழ்க்கை, பண்பாடுகள் எவ்வாறிருந்தன என்பது தொடர்பில் மிகக் கூடிய தகவல்களை அளித்துள்ளன. யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமான இது இப்போது ஆண்டுதோறும் கிட்டத்தட்ட இரண்டரை மில்லியன் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் ஒரு இத்தாலிய சுற்றுலாத் தலமாகக் காணப்படுகிறது.[1]

Remove ads
பெயர்
இலத்தீன் மொழியில் "பொம்பெயி" என்பது பலவும் எனப் பொருள் கொள்ளும். எனினும், “ஒசுக்கன் மொழியில் ஐந்து என்பதைக் குறிக்கும் பொம்பே என்பதிலிருந்தே இது தோன்றியிருக்கலாம். இச்சொல் பொம்பெயி நகரின் அமைவுக்கு அடிப்படையான ஐந்து சிறு கிராமங்கள் அல்லது அங்கு முதலில் குடியேறிய ஐந்து குடும்பங்கள் என்பதைக் குறிக்கலாம்.” என தியடோர் கிராவுசு குறிப்படுகிறார்.[2]
தொல்லியல் ஆய்வுகள்
கி.பி 79-ல் வெசுவியஸ் மலையில் ஓர் எரிமலை சீற்றம் ஏற்பட்டது. அதில் வெளிப்பட்ட எரிமலைக் குழம்பில் பாம்பேய் நகரம் மூழ்கிப் போனது. அப்பகுதி இன்று அகழ்வாய்வாளர்களின் சொர்க்கமாக இருக்கிறது. டிசம்பர், 2020-இல் பொம்பெயி நகரத்தை அகழ்வாய்வு செய்த போது, 'ஃப்ரெஸ்கோஸ்' என்றழைக்கப்படும், ஈரமான சுண்ணாம்புக் கல் மீது வரையப்படும் ஒரு வகையான ஓவியங்கள் மற்றும் சுடுமண் பாத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.மேலும் இந்நகத்தின் கண்டுபிடிக்கப்பட்ட ஓவியத்தில் காணப்படும் படங்கள் மூலம் இந்நகரத்தின் துரித உணவகத்தில் வழங்கப்பட்ட உணவுகளாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. பன்றி இறைச்சி, மீன், நத்தை, மாட்டிறைச்சி போன்ற இறைச்சிகள் பயன்படுத்தியதற்கான தடயங்கள் இந்த பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பாத்திரங்களில் காணப்படுகின்றன.[3]நவம்பர் 2020 மாத ஆய்வில் பாம்பேய் தொல்பொருள் ஆய்வில் எரிமலைச் சாம்பலில் கிடைத்த ரோமப் பேரரசின் ஆண்டான் - அடிமை உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.[4] எரிமலைச் சாம்பலில் புதைந்து கிடக்கும் பாம்பேய் நகரத்தின் மூன்றில் ஒரு பகுதி, இன்னும் ஆராய்ச்சி செய்யப்படாமல் இருக்கிறது.
இத்தாலியில் பண்டைய ரோமப் பேரரசு கால நகரமான பாம்பேய்க்கு அருகில் ஒரு விழாக்கால தேரைத் தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள்.
நான்கு சக்கரங்களைக் கொண்ட இந்தத் தேர், பழங்கால குதிரை லாயத்துக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இந்தக் குதிரை லாயத்தில் இருந்துதான் கடந்த 2018-ம் ஆண்டு மூன்று குதிரைகளின் எச்சங்களை வெளியே எடுத்தார்கள். பண்டைய பாம்பேய் நகரின் வடக்கு எல்லையில் உள்ள சிவிட்டா கைலியனா எனும் பழங்கால மாளிகையின் முற்றத்தில் இந்தத் தேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[5]
Remove ads
மேற்கோள்கள்
உசாத்துணைகள்
வெளித் தொடுப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads