போரிசு நெம்த்சோவ்

From Wikipedia, the free encyclopedia

போரிசு நெம்த்சோவ்
Remove ads

போரிசு இயெஃபிமோவிச் நெம்த்சோவ் (Boris Yefimovich Nemtsov, உருசியம்: Борис Ефимович Немцóв; 9 அக்டோபர் 1959 27 பெப்ரவரி 2015) உருசிய அறிவியலாளரும் தாராளமயவாத அரசியல்வாதியும் ஆவார். 1990களில் அப்போதைய அரசுத்தலைவர் போரிசு எல்ட்சின் தலைமையில் வெற்றிகரமான அரசியல் வாழ்க்கை அமையப் பெற்றிருந்தார். 2000 முதல் விளாதிமிர் பூட்டினின் ஆட்சியை விமரிசித்து வந்தவர். 2015 பெப்ரவரி 27 அன்று உக்ரைனில் உருசியாவின் பங்கேற்பு குறித்தும் நாட்டில் நிலவும் நிதி நெருக்கடி குறித்தும் பூட்டினின் கொள்கைகளுக்கு எதிராக மாஸ்கோவில் பேரணி ஒன்றை ஒழுங்குபடுத்தும்போது கிரெம்லின் சுவர்கள் மற்றும் செஞ்சதுக்கத்திற்கு 200 மீட்டர்கள் தொலைவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.[1]

விரைவான உண்மைகள் போரிசு நெம்த்சோவ், உருசியக் கூட்டமைப்பின் துணைப் பிரதமர் ...

இறக்கும் வரை நெம்த்சோவ் யாரோசுலாவ் வட்ட பிராந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும், உருசியக் குடியரசுக் கட்சி, சொலிதார்னொஸ்த் என்ற எதிர்க்கட்சி இயக்கம் ஆகியவற்றின் தலைவர்களில் ஒருவராகவும் இருந்து வந்தார்.[2][3] விளாதிமிர் பூட்டினின் அரசை விமரிசித்து இவர் பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

Remove ads

கல்வியும் ஆய்வும்

கார்க்கி அரசுப் பல்கலைக்கழகத்தில் பயின்று 1981 இல் இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், தனது 25வது அகவையில் இயற்பியலிலும், கணிதவியலிலும் முனைவர் பட்டம் பெற்றார். 1990 வரை இவர் கார்க்கி வானொலி-இயற்பியல் கல்விக் கழகத்தில் பணியாற்றி வந்தார்.[4] குவாண்டம் விசையியல், வெப்ப இயக்கவியல், ஒலியியல் ஆகியவற்றில் 60 இற்கும் மேற்பட்ட ஆக்கங்களை வெளியிட்டுள்ளார். ஒளியியல் சீரொளி ஒன்றை இவர் கண்டுபிடித்துள்ளார்.[5][6]

Remove ads

மேற்சான்றுகள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads