மகட்பாற்காஞ்சி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தமிழில் தோன்றியுள்ள இலக்கியங்களில் காணப்படும் பொருள் அகத்திணை என்றும், புறத்திணை என்றும் பாகுபடுத்தப்பட்டுள்ளது. அகத்திணை மனத்திற்குத் தெரியும் ஆண்-பெண் உறவு பற்றியது. மறைவின்றி ஊரில் நடக்கும் நிகழ்ச்சிகள் புறத்திணை.

தொல்காப்பியம் புறத்திணையில் ஏழு பகுப்புகளை வைத்துள்ளது. அவற்றில் ஒன்று காஞ்சித்திணை. நிலையில்லாத உலகில் நிகழ்வனவற்றைக் கூறுவது காஞ்சித்திணை [1]

அதன் துறைகள் பலவற்றுள் மகட்பாற்காஞ்சி என்பது ஒன்று. 'நிகர்த்து மேல் வந்த வேந்தனொடு முதுகுடி மகட்பாடு அஞ்சிய மகட்பால்' என்று தொல்காப்பியம் அதனைக் குறிப்பிடுகிறது. அரசனுக்குப் பெண் தர அஞ்சும் முதுகுடியைப் பெருமைப்படுத்திக் கூறுவது மகட்பாற்காஞ்சி. [2]

மகட்பாற்காஞ்சி என்னும் துறைப் பாடல் புறநானூற்றுத் தொகுப்பில் 20 உள்ளன. [3] இது பொதுவியல் என்னும் பகுதியில் வரும் துறை.

தொல்காப்பியம் இப் பொருள் மேல் வரும் பாடல்களைக் காஞ்சித்திணையில் அடக்கிக் காட்டுகிறது.[4] புறப்பொருள் வெண்பாமாலை இலக்கணமும் தொல்காப்பிய வழியில் செல்கிறது.[5]

Remove ads

புறநானூறு

  • விரும்பிய வேந்தன் பெருஞ்சினத்தன். தந்தையும் பெண்ணைத் தரமாட்டான். தாய் ஊருக்குப் பகை உண்டாக்கும் இந்தப் பெண்ணை வளர்த்திருக்கிறாளே! [6]
  • இவள் பாரி நாட்டுப் பனிச்சுனை போல அரியள். இவளை அமுக்கப்போவது யார்? [7]
  • வேம்பு, ஆர், போந்தை அணிந்த வேந்தர் வரினும் மகளைத் தரமாட்டான். [8]
  • வேந்தர் நெஞ்சம் கொண்டு ஒளித்தாள். [9]
  • ஆனிரை மீட்கும் கரந்தை வீரனுக்கு என வரைந்து சொல்லிவைக்கப்பட்டிருந்தாள். [10]
  • இவளால் இந்த ஊர் யானை கலக்கிய குளம் போல் ஆகிவிடுமோ? [11]
  • மயிலைக் கண்ணி பெருந்தோள் குறுமகள் யார் மகள்? [12]
  • கடல் வணிகத்தால் செல்வம் மிக்க முசிறி அளவு பொருள் தரினும் பெண்ணைத் தரமாட்டான். [13]
  • காஞ்சிப் பனிமுறி சூடியவள். [14]
  • வந்தோர் பலரே வம்ப வேந்தர். [15]
  • இவள் நலன் ஊரைப் பாழாக்கும். [16]
  • அகுதை கூடல் நகரம் போல் கூந்தல் உடையவள். [17]
  • தாய் இவளைப் பெறாமல் இருந்தால் இந்த ஊருக்குத் துன்பமை இல்லையே. [18]
  • மரத்தில் பற்றிய சிறு தீ போல இவள் ஊரைச் சுடுகிறாள். [19]
  • வேந்தர் இவளை ஆகத்துச் சுணங்கை அணைத்துக் கொள்ளாமல் விடமாட்டார்கள் போல் இருக்கிறதே! [20]
  • கடல் கண்டு அன்ன படை சூழ்ந்திருக்கிறதே! [21]
  • உறையூர் போன்ற செல்வம் தந்தாலும் இவளைத் தந்தை தரமாட்டான். [22]
  • வல்வில் தொல்குடி மன்ன்ன் மகள். [23]
  • வேல் வீரர் வெள்ளம் போல் குவிந்துள்ளனரே! [24]
  • இவளால் ஊரே சுடுகாடாகிவிட்டது. [25]
Remove ads

அடிக்குறிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads