மகதலேனா மரியாள்

From Wikipedia, the free encyclopedia

மகதலேனா மரியாள்
Remove ads

மகதலாவின் மரியா (Mary of Magadala) அல்லது மகதலேனா மரியாள் (Mary Magdalene, மேரி மக்தலீன்) புதிய ஏற்பாட்டில் இயேசுவின் மிக நெருங்கிய சீடராகவும் மிக முக்கியமான பெண் சீடராகவும் விவரிக்கப்படுகிறார்.[3] இவரது பெயர் இவர் பிறந்த ஊரான தற்போதய இசுரேலில் அமைந்துள்ள மகதலாவின் மரியாள் எனப் பொருள்படும். இயேசு அவரை "ஏழு அரக்கர்களிடமிருந்து" காப்பாற்றியதாக, Lu 8:2 Mk 16:9 கூறப்படுவது சிக்கலான நோய்களிலிருந்து அவரைக் குணப்படுத்தியதைக் குறிப்பதாக புரிந்துகொள்ளப்படுகிறது.[4] மரியா இயேசுவின் கடைசி நாட்களில் கூடவே இருந்தார்; அவரைக் சிலுவையில் அறைந்தபோது (அன்பிற்குரிய ஜானைத் தவிர) பிற ஆண் சீடர்கள் ஓடியபோதும் பின்னர் கல்லறையிலும் உடனிருந்தார். ஜான் 20 மற்றும் Mark 16:9 ஆகிய இருவர் கூற்றுப்படி இயேசு உயிர்த்தெழுந்த பிறகு முதலில் அவரைக் கண்டதும் மகதலா மரியே.[3] .

விரைவான உண்மைகள் மகதலா மரியா, பிறப்பு ...

இவர் உரோமன் கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, அங்கிலிக்கன் திருச்சபை ஆகியவற்றால் புனிதராக மதிக்கப்படுகிறார். இவரது திருநாள் யூலை 22 ஆகும். லூதரன் திருச்சபைகளும் அதே நாளில் இவரைக் கௌரவிக்கின்றன. மரியாளின் வாழ்க்கை ஆய்வாளர்களால் தொடர்ந்து சர்சைக்குட்படுத்தப்பட்டு வந்துள்ளது.

நம்பிக்கையின் திருத்தூதர்:

திருத்தந்தை பிரான்சிஸ் சமீபத்தில் ஆற்றிய உரையில் மகதலா மரியாளை நம்பிக்கையின் திருத்தூதராக சுட்டிக்காட்டுகின்றார்.

Thumb
புனித மகதலா மரியாள் திருதூதர்களுக்கு நற்செய்தியினை அறிவித்தது

"மகதலா மரியா, நம்பிக்கையின் திருத்தூதர் என, நற்செய்தியால் சுட்டிக்காட்டப்படுகிறார். இயேசு, உயிர்த்த நாளின் காலையில், மரியா, இயேசுவின் கல்லறைக்குச் சென்றார், காலியான கல்லறையை அவர் கண்டார், பின், இந்தச் செய்தியை, பேதுருவிடமும், மற்ற சீடர்களிடமும் சொல்வதற்காக அங்கிருந்து திரும்பினார் என, புனித யோவான் நமக்குச் சொல்கிறார். என்ன நடந்தது என்பதை இன்னும் புரியாதநிலையில், மரியா கல்லறைக்குச் சென்றார், அங்கே உயிர்த்த ஆண்டவரைச் சந்தித்தார், அவர், மரியாவை, பெயர் சொல்லி அழைக்கும்வரை, அவரை யார் என மரியா அறியாமல் இருந்தார். இறந்தோரிடமிருந்து இயேசு உயிர்பெற்றெழுந்தபின், இது அவர் அளித்த முதல் காட்சியாகும். இக்காட்சி, மிகவும் ஓர் ஆழமான தனிப்பட்ட நிகழ்வாக உள்ளது. இயேசு, மகதலா மரியாவிடம் நடந்துகொண்டதுபோன்று, நம் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைக்கிறார். தம் பிரசன்னத்தால் நம்மை மகிழ்வால் நிரப்புகிறார். இயேசுவை நாம் சந்திக்கும்போது, அது நமக்குச் சுதந்திரத்தைக் கொணர்ந்து, வாழ்வை புதிய கோணத்தில் பார்ப்பதற்கு, நம் பார்வையைத் திறந்து வைக்கின்றது. அது, இந்த உலகை மாற்றுகின்றது மற்றும், இறவா நம்பிக்கையை நமக்கு அளிக்கின்றது. உயிர்த்த ஆண்டவர், மரியாவிடம், என்னை பற்றிக் கொள்ளாதே, மாறாக, போய், தம் உயிர்ப்பின் நற்செய்தியை மற்றவருக்கு அறிவி என்று சொன்னார். இவ்வாறு, மகதலா மரியா, கிறிஸ்தவ நம்பிக்கையின் திருத்தூதராக மாறுகிறார். நாமும், இவரின் செபங்களின் வழியாக உயிர்த்த ஆண்டவரைப் புதிதாகச் சந்திப்போமாக. உயிர்த்த ஆண்டவர், நம்மைப் பெயர் சொல்லி அழைக்கின்றார், நம் துன்பங்களை மகிழ்வாக மாற்றுகின்றார் மற்றும், அவர் உண்மையிலேயே உயிர்பெற்றெழுந்தார் என்பதை, நம் வாழ்வால் அறிவிப்பதற்கு நம்மை அனுப்புகிறார்."[5]

அப்போஸ்தலர்களுக்கு அப்போஸ்தலி(திருத்தூதர்களுக்கு திருத்தூதுரைத்தவள்) :

சமீபத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் மகதலா மரியாளின் நினைவு நாளை அப்போஸ்தலர்களை போலவே திருவிழாவாக மாற்றினார்.[6] அதில் மகதலா மரியாளின் சிறப்பான அப்போஸ்தல பணியானது சுட்டிக்காட்டப்படுகிறது. "ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தார் " என்பதே கிறிஸ்தவ மறையின் தலையாய விசுவாசமும் நற்செய்தியும் ஆகும்(1 கொரிந்தியர் 15:14). அதை முதன் முதலில் உலகுக்கு அறிவித்தது ஒரு பெண். அவள் தான் மகதலா மரியாள். ஏதேன் தோட்டத்தில், வாழ்வு நிறைந்திருந்த நிலையில் ஏவாள் என்னும் முதல் அன்னை மனிதனுக்கு சாவினை கனி வழியாக அறிவித்தாள். கெத்சமணி தோட்டத்தில் , சாவும் துயரமும் நிறைந்திருந்த நிலையில் மகதலா மரியாள் என்னும் அன்னை மனிதனுக்கு வாழ்வினை நற்செய்தி என்னும் இயேசுவின் கனி வழியாக அறிவித்தாள். இதை புனித தோமா அக்குவினாரும் குறிப்பிட்டுள்ளார். புனிதர்களில் இத்தகு சிறப்பு பெயரை தாங்கியுள்ள ஒருவர் புனித மகதலா மரியாள் என்பது குறிப்பிடப்பட்டது.

இறைஇரக்கத்தின் சாட்சி:

கெத்சமணி தோட்டத்தில் தம் அன்பர் இயேசுவை காணாத மகதலா மரியாள் கண்ணீர் வடித்தாள் என்று திருவிவிலியம் கூறுகின்றது . அவளின் அன்புக்கண்ணீரை புனித அன்ஸ்லம் "தாழ்ச்சியின் கண்ணீர் " என்று குறிப்பிடுகின்றார். மகதலா மரியாளின் அன்பால் கசிந்த கண்ணீரை கண்டு இரங்கிய கிறிஸ்து தன் உயிர்ப்பின் மகிமையில் அவளுக்கு தோன்றினார். தான் படைத்த படைப்பு, தன்னை படைத்தவரை அன்பொழுக தேடும் போது அன்பே உருவான இறைவன் ,எவ்வாறு தன்னை மறைத்துக் கொள்வார் ? புனித பாப்பரசர் பெரிய கிரகோரியார் இதை முன்னிட்டே இறை இரக்கத்தின் சாட்சியென மகதலா மரியாளை கூறுகின்றார்.[6]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads