மகாசுவேதா தேவி
சாகித்திய அகாதமி விருது பெற்ற வங்காள எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மகாசுவேதா தேவி (Mahasweta Devi, 14 சனவரி 1926 — 28 சூலை 2016)[2][3] வங்காள எழுத்தாளர் மற்றும் பீகார், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் முதலான பகுதிகளின் பழங்குடி மக்கள் நலனுக்காகப் பாடுபட்ட சமூக ஆர்வலர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்டவர். இவர் இலக்கியக் குடும்பத்தில் பிறந்தவர்.
ரமன் மெகசசே விருது, நாட்டு ஒற்றுமைக்கான இந்திரா காந்தி விருது, சாகித்ய அகாதமி, பத்மஸ்ரீ, பத்மவிபூஷண் முதலான பல விருதுகள் பெற்றவர்.
இவரது நூல்கள் ஆங்கிலம், தமிழ் என பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
இவரது கதைகள் பல திரையுருவம் பெற்றுள்ளன.
Remove ads
விருதுகள்
- 1979: சாகித்திய அகாதமி விருது (வங்காள மொழி): – அரன்யெர் அதிகார் (Aranyer Adhikar) (புதினம்)[4]
- 1986: சமூகப்பணிக்காக பத்மசிறீ விருது[4][5]
- 1996: ஞானபீட விருது[4]
- 1997: ரமோன் மக்சேசே விருது[3][6]
- 1999: மதிப்புறு முனைவர் பட்டம் – இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம்
- 2006: பத்ம விபூசண் – [4]
- 2009: மான் புக்கர் பன்னாட்டுப் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார்
- 2010: யஷ்வந்த்ராவ் சவான் தேசிய விருது[7]
- 2011: வங்க பிபூஷண் (Banga Bibhushan) – மேற்கு வங்காள அரசு[8]
Remove ads
மறைவு
மகாசுவேத்தாதேவி 2016 சூலை 23 இல் மாரடைப்பு ஏற்பட்டு கொல்கத்தாவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 2016 சூலை 28 வியாழக்கிழமை தனது 90வது அகவையில் காலமானார்.[9][10]
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads