மகாதேவ் பிரசாத் மிசுரா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மகாதேவ் பிரசாத் மிசுரா (Mahadev Prasad Mishra) (1906 - 13 திசம்பர் 1995) வாரணாசியைச் சேர்ந்த இந்திய தும்ரி பாடகர் ஆவார். [1]
ஆரம்ப கால வாழ்க்கை
மிசுரா 1906 இல் அலகாபாத்தில் பிறந்தார். இவர் முதலில் பைரோன் மிசுராவின் கீழ் கற்கத் தொடங்கினார். பின்னர் பனாரசு கரானாவின் (பள்ளி) பரே ராம் தாசின் கீழ் பயிற்சியைத் தொடர்ந்தார்.
தொழில்
புகழ்பெற்ற பாடகரான இவரது தந்தை துவாரகா பிரசாத் மிசுரா வாரணாசியைச் சேர்ந்தவர். மகாதேவ் பிரசாத் தும்ரி, தப்பா, கியால், தாத்ரா, கஜ்ரி, சைத்தி மற்றும் பிர்ஹா போன்ற பல இசை பாணிகளில் நிபுணராக இருந்தார். படே குலாம் அலி கான், ரசூலன் பாய், பேகம் அக்தர், கிரிஜா தேவி மற்றும் ஷோபா குருது ஆகியோருடன் அவர் 20 ஆம் நூற்றாண்டின் சிறந்த தும்ரி பாடகர்களில் ஒருவர். இவருடன் பல முறை பச்சா லால் மிசுராவும், சாரங்கியின் ஈசுவர் லால் மிசுராவும் இணைந்து நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர்.[2]
Remove ads
சீடர்கள்
இவரது நன்கு அறியப்பட்ட சீடர்களில் கைம்முரசு இணை கலைஞர் ஆனந்த கோபால் பாந்தோபாத்யாய், செனாய் கலைஞர் அனந்த் லால், தும்ரி பாடகி பூர்ணிமா சௌத்ரி, வயலின் கலைஞர் என். இராஜம் ஆகியோர் அடங்குவர்.
குடும்பம்
கைம்முரசு இணைக் கலைஞருமான குபேர் நாத் மிசுரா, பனாரசின் புகழ்பெற்ற பாடகர்களான அமர் நாத் மிசுராவும், பசுபதிநாத் மிசுராவும் இவரது மருமகன்களாவார். இவருக்கு கணேஷ் பிரசாத் மிசுரா என்ற ஒரு மகன் இருக்கிறார்.
இறப்பு
மிசுரா 13 திசம்பர் 1995 அன்று தனது 88 வயதில் இறந்தார்.
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads