மகாபலிபுரம் கலங்கரை விளக்கம்
தமிழக கலங்கரை விளக்கம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மகாபலிபுரம் கலங்கரைவிளக்கம் (Mahabalipuram Lighthouse) தமிழ்நாட்டில், இந்தியா அமைந்துள்ள கலங்கரை விளக்கமாகும். 1887 இல் முதன் முதலில் இவ்விளக்கம் செயல் நிலைப்படுத்தப்பட்டது. இயற்கையான கருங்கற்கல்லால் இக்கட்டிடம் உருவாக்கப்பட்டது. இவ்விடம் சுற்றுலாத்தலமாக 2011 யில் அறிவிக்கப்பட்டது. முன்னதாக விடுதலைப் புலிகளிடமிருந்து எதிர்பார்த்த அபாயத்தால் 2001இல் இதனைச் சுற்றிப் பார்க்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
Remove ads
செயல்நிலை
சுழலும் விளக்கினைக் கொண்ட இந்த கலங்கரை விளக்கம் 1904 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டது. இவ்விளக்கத்திற்கு அருகிலேயே இந்தியாவிலே மிகப் பழமை வாய்ந்த பொ.ஊ. 640 ஆம் ஆண்டு மகேந்திர பல்லவரால் கட்டப்பட்ட கலங்கரை விளக்கம் உள்ளது. தற்போது பல்லவரின் நினைவுச் சின்னமாக விளங்குகின்ற இதனை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் பராமரித்து வருகிறது.[2]
சுற்றுலாத் தளம்
மனித குலத்தின் தொன்மையான ஆய்வு சார்ந்த இடம் இது. இவ்விடத்திற்கு அயல்நாட்டினரின் வருகை அதிகரித்துள்ளதால் நம் நாட்டிற்கு பெருவாரியான அந்நியச் செலாவணி அதிகரித்துள்ளது.
புகைப்படத்தொகுப்பு
- இரவு நேரத்தில் மகாபலிபுரம் கலங்கரைவிளக்கம்
- மகாபலிபுரம் கலங்கரை விளக்கம்
- ஒலக்கண்ணேஸ்வர ஆலயம்
- பழைய மற்றும் புதிய கலங்கரைவிளக்கம்
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads