மகாபாரதம் (2013 தொலைக்காட்சித் தொடர்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மகாபாரதம் என்பது விஜய் தொலைக்காட்சியில் அக்டோபர் 7, 2013 முதல் ஒளிபரப்பான ஒரு புராண தொன்மவியல் காவியத்தொடர் ஆகும். இந்த தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பானது. இக்காவியம் 100 கோடி பொருள் செலவில் எடுக்கப்பட முதல் இந்திய தொடர் ஆகும்.[1] இந்த தொடருக்கு வி. பாலகிருஷ்ணன் வசனம் எழுத, பாடலாசிரியர் ருக்மணி ரமணி பாடல் எழுதியுள்ளார்.
இந்த தொடர் ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'மகாபாரத்' என்ற தொடரின் தமிழாக்கம் ஆகும். இந்த தொடர் செப்டம்பர் 22, 2013 முதல் ஆகத்து 16, 2014 வரை ஒளிபரப்பாகி 267 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது.
Remove ads
மொழிமாற்றம்
தொடரை செவன்த் சேனல் சமஸ்கிருதம் கலந்த தமிழில் மொழிமாற்றம் செய்துள்ளது. இந்த தொடர் இந்திய மொழிகள் ஆனா தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், மராத்தி, மற்றும் வங்காள மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த தொடர் இந்தோனேசிய மொழியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விமர்சனங்கள்
தொடரின் வசனங்கள் முழுக்க முழுக்க தமிழ்மொழியில் மொழிபெயர்க்கப்படவில்லை என்றும், தமிழ் மொழிபெயர்ப்பில் சமஸ்கிருத வார்த்தைகளே நிறைந்துள்ளன என்று விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.[மேற்கோள் தேவை]
ஒளிபரப்பாகும் நேரம்
- இந்தி மொழியில் மஹாபாரத் என்ற பெயரில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
- தெலுங்கு மொழியில் மகாபாரதம் என்ற பெயரில் மொழிமாற்றான் செய்யப்பட்டு திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 4:30 மணிக்கு மா தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
- மலையாளம் மொழியில் மகாபாரதம் என்ற பெயரில் மொழிமாற்றான் செய்யப்பட்டு திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஏஷ்யாநெட் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
- வங்காள மொழியில் மஹாபாரத் என்ற பெயரில் மொழிமாற்றான் செய்யப்பட்டு திங்கள் முதல் சனி வரை மாலை 5 மணிக்கு ஸ்டார் ஜல்சா தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
நடிகர்கள்
- சவ்ரப் ராஜ் ஜெயின் - வாசுதேவ கிருஷ்ணன்
- சாகிர் சேக் - அர்ஜுனன்
- பூஜா ஷர்மா - திரௌபதி
- அகம் ஷர்மா - கர்ணன்
- ஆரவ் சௌத்ரி - பீஷ்மர்
- பிரனித் பட் - சகுனி
- ரோகித் பரத்வாஜ் - யுதிஷ்ட்டிரன்
- சவ்ரவ் குஜார் - பீமன்
- ஆர்பிட் ரன்கா - துரியோதனன்
- வின் ராணா - நகுலன்
- லாவண்யா பரத்வாஜ் - சகாதேவன்
- நிசார் கான் - த்ரோணாச்சாரியார்
- பல்லவி சுபாஷ் - ருக்மணி
- அட்டுல் மிஷ்ரா - வேதவியாசர்
- புனித் இச்சர் - பரசுராமர்
- சச்சின் வர்மா - தேவேந்திரன்
- சயன்தனி கோஷ் - சத்யவதி
- சமிர் தர்மாதிகாரி - சாந்தனு
- நிர்பை வத்வா - துச்சாதனன்
- விபா ஆனந் - சுபத்திரை
- பராஸ் ஆரோரா - அபிமன்யு
- ரிச்சா முகர்ஜி - உத்தரை
- ஷிகா சிங் - சிகண்டி / சிகண்டினி
- அனுப் சிங் தாகூர் - திருதராஷ்டிரன்
- ரியா தீப்சி - காந்தாரி
- சஃபாக் நாஸ் - குந்தி
- நவீன் ஜிங்கர் - விதுரன்
- கரிமா ஜெயின் - துச்சலை
- சுதேஷ் பெர்ரி - மாகாராஜா துருபதன்
- கரன் சுஷக் - திருஷ்டதுய்மணன்
- நஜியா காசன் சையத் - விருஷாலி
- அலி காசன் - தக்ஷகன்/ஜெயத்ரதன்
- அன்கிட் மோஹன் - அசுவத்தாமன்
Remove ads
இவற்றை பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads