மகுடம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்து சமய சிற்பகலையில் இறை உருவங்களுக்கு தலையில் மகுடம் எனும் அணிகலனை அணிவித்திருப்பர். மகுடத்தை பண்டைய காலத்தில் அரசர்களோ, தலைவர்களோ தங்கள் பதவியினை குறிப்பதற்காக அணிந்துள்ளனர்.
வகைகள்

இந்த மகுட அணிகலன் கிரீட மகுடம், கரண்ட மகுடம், சடா மகுடம், ஜுவால மகுடம் என பல வகைகளில் உள்ளன.[1] சில இறைகளுக்கென தனித்துவமான மகுடங்கள் உள்ளன. உதாரணமாக சிவபெருமானுக்கு அவருடைய சடையையே மகுடம் போல அமைப்பது சடாமகுடம் எனப்படுகிறது. சில இடங்களில் விரிசடையுடன் சிவபெருமான் சிற்பங்கள் அமைந்துள்ளன. திருமால் மற்றும் அரசர்கள் தலையில் இடம் பெறுவது கிரீட மகுடமாகும். தேவியர் மற்றும் முருகன், கணபதி ஆகியோர்களுக்கு அமைக்கப்படுவது கரண்ட மகுடமாகும்.மாரியம்மன், காளி முதலான இறை உருவங்களுக்கு தீக்கிரீடம் எனப்படும் ஜீவால மகுடம் (தீச்சுடர்)இடம் பெறும்.

- ஜடாமகுடம்
- ஜடா பாரம்
- ஜடா மண்டலம்
- ஜடாபந்தம்
- சர்ப்ப மௌலி
- விரிசடை
- சுடர்முடி
- கிரீட மகுடம்
- சிரஸ்திரகம்
- குந்தளம்
- தம்மில்லம் அல்லது தமிழம்
- அளக சூடம்
- கரண்ட மகுடம்
Remove ads
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads