மகேந்திரகிரி (ஒடிசா)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மகேந்திரகிரி (Mahendragiri) என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலத்திலுள்ள கஜபதி மாவட்டத்தின் ராயகடா துணைப்பிரிவில் உள்ள ஒரு மலையாகும்.[1] இது கிழக்கு தொடர்ச்சி மலைகளுக்கு இடையே 1,501 மீட்டர் (4,925 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. .

விரைவான உண்மைகள் மகேந்திரகிரி, உயர்ந்த புள்ளி ...
Remove ads

நிலவியல்

கோராபுட் மாவட்டத்திலுள்ள தியோமாலிக்குப் பிறகு ஒடிசாவின் இரண்டாவது உயரமான மலைச்சிகரம் இதுவாகும். இது சுவாரசியமான தொல்பொருள் எச்சங்களைக் கொண்டுள்ளது.[1]

மகேந்திரகிரி மலையும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளும் இங்கு காணப்படும் எண்ணற்ற மருத்துவ தாவரங்கள் மற்றும் பிற இனங்கள் காரணமாக பல்லுயிர் வெப்ப இடமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மருத்துவ தாவரங்களின் புகலிடமாக, கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக இருக்கும் மகேந்திரகிரி மலைகள், 600 க்கும் மேற்பட்ட மலர்ச்செடிகளுக்கு தாயகமாக உள்ளது. இப்பகுதியின் விலங்குகளின் பன்முகத்தன்மை மிகப்பெரியது. குறிப்பாக பாம்புகளின் முக்கிய வாழ்விடமாக அறியப்படுகிறது.[2]

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், மகேந்திரகிரி மலையை பல்லுயிர் பெருக்கப் பகுதியாக அறிவிக்க ஒடிசா மாநில அரசிடம் 1986ல் முன்மொழிந்தது. வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் நிபுணர் குழுவும், மகேந்திரகிரி மலைகள் உயிரி பன்முகத்தன்மை கொண்ட பகுதிகளை உயிர்க்கோள காப்பகமாக 2014 இல் அறிவிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.[3] .

2011 நவம்பரில் அமைக்கப்பட்ட மகேந்திரகிரி உயிர்க்கோள காப்பகக் குழு, கடந்த திசம்பரில் தனது கடைசிக் கூட்டத்தை நடத்தியது. அதன்பிறகு மகேந்திரகிரி மலை வளாகத்தில் உயிர்க்கோள காப்பகத்தை உருவாக்க வேண்டும் என்று பரிந்துரைத்து இறுதி அறிக்கையை சமர்ப்பித்தது.

ஒடிசா வான்வெளி ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வின்படி, மலையின் மையப் பகுதி 42.54-கி.மீ. 2க்கு பரவியிருக்கலாம் எனத் தெரிகிறது. இடையக மண்டலம் 1577.02-கி.மீ. 2 பரப்பளவைக் கொண்டிருக்கலாம். இடைநிலைப் பகுதி 3095.76 -கி.மீ. 2 என மதிப்பிடப்பட்டுள்ளது. முழு உயிர்க்கோள இருப்பும், 4715.32 கி.மீ. 2 இல் முன்மொழியப்பட்டது.[3]

Remove ads

புராணக் கதை

இராமாயணத்தில் இந்த மலை 'மகேந்திர பர்வதம்' (மலை) என்று கூறப்பட்டுள்ளது. இது மலாயா, சஹ்யாத்ரி, பாரிஜாத்ரா, சுக்திமான், விந்தியா, மால்யவான், குல பர்வதம் என்றெல்லாம் இது அறியப்படுகிறாது.[1] புராணங்களிலும், இராமாயணத்திலும், இராமன் சிவனின் வில்லை உடைத்தபோது பரசுராமர் மகேந்திரகிரியில் தியானத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.[1]

பரசுராமர் நிரந்தரமாக தங்கி தவம் செய்யும் தலம் இது என்று புராணங்கள் கூறுகின்றன. இந்து புராணங்களில் விஷ்ணுவின் ஆறாவது அவதாரம் ஆவார். இவரது காலம் திரேத யுகம் ஆகும். இவர் ஜமதக்கினி - ரேணுகா இணையரின் மகன் ஆவார். 'பரசு' என்றால் கோடாரி என்று பொருள். இவர் கடுந்தவம் செய்து சிவ பெருமானிடம் இருந்து ஒரு கோடாரியைப் பெற்றார். அதனால் இவர் பரசு-ராமர் என்று அழைக்கப்படுகிறார். இவர் கலியுகத்தின் இறுதியில் விஷ்ணுவின் பத்தாவது மற்றும் கடைசி அவதாரமான கல்கியின் குருவாக தோன்றுவார். ஆக்கிரமிப்பு, போர் மற்றும் வீரம் உள்ளிட்ட பல பண்புகளை இவர் கொண்டிருந்தார்; மேலும், அமைதி, விவேகம் மற்றும் பொறுமை. பாகவத புராணத்தின் 2.3.47 அத்தியாயத்தின்படி இவர் மகேந்திர மலைகளில் தங்கினார்.[4] ஒருபோதும் இறக்காத, அருவமான விஷ்ணுவிடம் திரும்பாத மற்றும் தியானத்தில் வாழும் ஒரே அவதாரம் இவர் மட்டுமே என புராணங்கள் கூறுகின்றன. மேலும், இராமாயணத்திலும், மகாபாரதத்தின் சில பதிப்புகளிலும் முறையே விஷ்ணுவின் அவதாரங்களான இராமர் மற்றும் கிருஷ்ணருடன் இணைந்து இருக்கும் ஒரே அவதாரம் இவர் மட்டுமே.[5][6] பாண்டவர்களால் கட்டப்பட்டதாகக் கூறப்படும் கோயில்களும் இங்கு உள்ளன. மகா சிவராத்திரி இங்கு கொண்டாடப்படும் முக்கிய திருவிழாவாகும் .

Remove ads

சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads