மக்கபேயர் அரசு

From Wikipedia, the free encyclopedia

மக்கபேயர் அரசு
Remove ads

மக்கபேயர் அரசு அல்லது ஹஸ்மோனிய அரசு (Hasmonean dynasty[2] எபிரேயம்: חשמונאים, r Ḥashmona'im; Audio பரணிடப்பட்டது 2007-11-05 at the வந்தவழி இயந்திரம்) என்பது யூதேயா மற்றும் அதனைச் சூழ்ந்திருந்த பிரதேசங்களை உன்னத பழம்பொருட் காலத்தில் ஆட்சி செய்த அரசாகும். கிட்டத்தட்ட கி.மு. 140 - 116 காலப்பகுதியில் செலூசிட்டிடமிருந்து பெற்ற அரை அதிகாரத்தில் யூதேயாவை ஆண்டனர். கிமு 110 இலிருந்து செலூக்கியப் பேரரசு சிதவடைந்ததும் முழு சுதந்திர அரசாக மாறி, தன் எல்லையை கலிலேயா, இத்துரியா, பெரா, இதுமேயா, சமாரியா என விரிபுபடுத்தியது. சில வரலாற்றாசிரியர்கள் இக்காலத்தை சுதந்திர இசுரேலிய அரசு எனக் குறிப்படுகின்றனர்.[3] கி.மு. 63 இல் இவ்வரசு உரோமைக் குடியரசால் வெற்றி கொள்ளப்பட்டு, உரோம வாடிக்கை அரசாக மாற்றப்பட்டது. கி.மு. 37 இல் ஏரோதிய அரசிடம் தோற்கும் வரை 103 ஆண்டுகள் ஆட்சி செய்தது. ஆயினும் முதலாம் ஏரோது மக்கபேய இளவரசியை திருமணம் செய்வதனூடாக தன் பிரதேசத்து சட்ட ஒழுங்கை காப்பற்ற முனைந்தபோதும், மக்கபேய கடைசி ஆண் வாரிசை தன்னுடைய எரிக்கோ அரண்மனையில் வைத்து மூழ்கடிக்கத் திட்டமிட்டான்.

விரைவான உண்மைகள் மக்கபேயர் அரசுממלכת החשמונאים Mamlekheth haHash'mona'im, நிலை ...
Remove ads

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads