மக்கேமக்கே
சூரியக் குடும்பத்தின் ஒரு குறுங்கோள் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மக்கேமக்கே (Makemake, சின்னம்: ;[6] சிறுகோள் வரிசை எண் 136472 மக்கேமக்கே) என்பது ஒரு குறுங்கோள் ஆகும். இது கைப்பர் பட்டை பகுதியில் உள்ள பொருள்களில் சற்று பெரியது. இது புளூட்டோவில் 2/3 பங்கு அளவு உடையது. இதற்கு இயற்கைத் துணைக்கோள் கிடையாது என்பதால், இதன் திணிவை நம்மால் அளவிட முடியும். இது மிகவும் குறைந்த சராசரி வெப்பநிலையை உடையது. இதன் வெப்பநிலை சுமார் 30 கெல்வின் ஆகும். எனவே இது மெத்தேன், எத்தேன் மற்றும் நைட்ரசன் பனிக்கட்டிகளால் மூடப்பட்ட மேற்பரப்பை கொண்டிருக்கும் எனக் கருதப்படுகிறது.
மைக்கேல் பிரவுனின் தலைமையிலான குழுவினால், மக்கேமக்கே, 31 மார்ச் 2005 அன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் 29 ஜூலை 2005 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆரம்பத்தில், இதை 2005 FY9 என பெயரிட்டார்கள், அதன்பின் சிறுகோள் வரிசை எண் 136472 கொடுக்கப்பட்டது. ஜூலை, 2008 இல் உலகளாவிய வானியல் ஒன்றியம் இதற்கு குறுங்கோள் அங்கீகாரத்தைக் கொடுத்தது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads