மங்கம்மாள் சத்திரம், மதுரை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மங்கம்மாள் சத்திரம் என்பது தமிழ்நாட்டில் மதுரையில் உள்ள ஒரு சத்திரம் ஆகும்.
அமைவிடம்
இச்சத்திரம் மேலவெளி வீதியில் தொடர்வண்டி சந்திப்பின் எதிரில் அமைந்துள்ளது[1]. முக்கிய வழித்தடங்களெங்கும் அறச்சாலைகள் அமைப்பதில் நாட்டம் கொண்டிருந்த ஆட்சியாளரான இராணி மங்கம்மாளின் பெயரில் பல சத்திரங்கள் பல்வேறு ஊர்களில் இருந்தாலும் மதுரையில் உள்ள இச்சத்திரம் பெரியதும், புகழ்பெற்றதும் ஆகும்.
அமைப்பு
இச்சத்திரம் இராணி மங்கம்மாளால் ஏற்படுத்தப்பட்டதாகவும், அவரது நினைவாக ஏற்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பல பகுதிகளிலிருந்து மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கும், ராமேசுவரம் செல்வதற்கும் வந்த பயணிகளின் வசதிக்காக 1894-இல் கட்ட ஆரம்பிக்கப்பட்டு, 1900-இல் முடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. முறையே 24, 20, 15, 20, 18 அறைகள் கொண்ட ஐந்து கட்டிடத் தொகுதிகளில் மொத்தம் 97 அறைகள், குதிரை லாயங்களுடன் கட்டப்பட்ட இக்கட்டிடம் மாவட்ட நிர்வாகம் வசமிருந்திருக்கிறது [2]. அப்போது பார்ப்பனர்களுக்கும், பிறருக்கும் தனித்தனியே அறைகள் ஒதுக்கப்பட்டதாகத் தெரிகிறது[3]. இம்முறை நீதிக்கட்சி அரசினால் ஒழிக்கப்பட்டதாகக் குறிப்பொன்றுள்ளது[4].
Remove ads
தற்போதைய நிலை
தற்சமயம் மாநகராட்சியின் வசத்தில் உள்ள இக்கட்டிடத்தின் ஒரு பகுதி தங்கும் விடுதியாகவும், பிற பகுதிகளில் சுற்றுலா தகவல் மையம்[5], மாநகராட்சி வரிவசூல் மையம், பூம்புகார் கைவினைப்பொருள் விற்பனையகம் உள்ளிட்ட பல்வேறு கடைகளும் செயல்பட்டு வருகின்றன.
சான்றுகள்
வெளி இணைப்புகள்
இவற்றையும் காண்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads