மச்ச சம்ஹார மூர்த்தி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மச்ச சம்ஹார மூர்த்தி, அறுபத்து நான்கு சிவனின் திருமேனிகளுள் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகும். மச்சம் என்றால் மீன் என்று பொருள். மச்ச அவதாரம் எடுத்து வந்த விஷ்ணுவை கொன்ற சிவனின் திருவுருவம் தான் மச்ச சம்ஹார மூர்த்தி என்று அழைக்கப்படுகிறது.

சிவ வடிவங்களில் ஒன்றான
மச்ச சம்ஹார மூர்த்தி
வேறு பெயர்(கள்):காயலழி அண்ணல்
மூர்த்த வகை:
64 சிவவடிவங்கள்
விளக்கம்:திருமாலின் மச்ச அவதாரத்தை கொன்ற வடிவம்
இடம்:கைலாயம்
வாகனம்:நந்தி தேவர்

உருவக் காரணம்

சோமுகாசுரன் மூன்று லோகத்தினராலும் யாவராலையும் அழிக்க முடியாத வரத்தினை சிவனிடமிருந்துப் பெற்றிருந்தான். அந்த அகந்தையில் பிரம்மனிடம் சென்று வேதங்கள் நான்கையும் பிடுங்கிக் கொண்டு கடலிலுள் சென்று மறைந்தான். பிரம்மன் விஷ்ணுவிடம் நடந்தவற்றை கூறினான். விஷ்ணுவும் ஒரு பெரிய மீன் வடிவம் ஏற்றான். கடலிலுள் சென்று சோமுகாசுரனைத் தேடிக் கடலையேக் கலக்கினான். பின்னர் ஒளிந்திருந்த சோமுகாசுரனை கண்டுபிடித்து அவனை கொன்றான். அவனிடமிருந்து பறிக்க வேதங்களை மீண்டும் பிரம்மனிடம் சேர்ப்பித்தான். ஆனாலும் சோமுகாசுரனின் உடலிருந்து வெளிவந்த இரத்தம் சமுத்திரத்தை செந்நிறமாகக்கியது மற்றும் அந்த மீன் இதை சாப்பிட்டது. அதன் காரணமாக அதான் பின் அந்த பெரிய மந்தார மலை போன்ற அந்த மீன் கடலை இடித்தபடி கொள்ளாமல் திசை நான்கிலும் பரவி நிரம்பியிருந்தான். அவன் அங்கிருக்கும் அனைத்து மீன்களையும் கொன்று தின்றான். ஒரு கடல் விலங்கினங்களையும் கூட விடாமல் அனைத்தையும் கொன்று தின்றான். இச்செய்தி தேவர்கள் மூலமாக சிவனை எட்டியது. சிவனும் தேவர்களுக்கு ஆறுதல் கூறி அக்கொடிய மீனை பிடிக்க மற்றும் கொல்ல வேண்டிய வேலையுடன் மீனவர் போல் உருமாறி அக்கடலில் அம்மீனிற்கு தக்கவாறு உருவம் கொண்டு நின்றார். வலை வீசி அப்பெரிய மீனைப் பிடித்தார். பின்னர் அதன் இரு கண்களை தோண்டி எடுத்து தன் மோதிரத்தில் ரதினங்களாக பதித்துக் கொண்டார் மற்றும் அந்த மீனை துண்டு துண்டாக வெட்டி கொன்றானர். இதனால் அந்த கண்ணிழந்த மற்றும் கொல்லப்பட்ட மீன் வடிவம் கொண்ட விஷ்ணு சிவனிடம் தன் பழைய உருவைத்தையும் உயிரையும் தருமாறுக் கேட்க, அவரும் இரண்டையும் தந்து ஆசி கூறினார். தேவர்களின் வேண்டுகோளின்படி அட்டூழியம் செய்த அந்த விஷ்ணுவின் வடிவமான மீனை கொல்ல சிவன் எடுத்த உருவமே மச்ச சம்ஹார மூர்த்தியாகும் மற்றும் அவர் அந்த விஷ்ணுவின் வடிவமான மீனைக் கொன்றார். இவரை காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலில் தரிசிக்கலாம். அங்கு ஒரு கல் தூணில் இவ்வுருவம் செதுக்கப்பட்டுள்ளது.

சொல்லிலக்கணம்

வேறு பெயர்கள்

காயலழி அண்ணல்

தோற்றம்

திருமாலின் மச்ச அவதாரத்தை கத்தியால் துண்டு துண்டாக வேட்டி ககொல்வதே மச்ச சம்ஹார மூர்த்தியின் வடிவாகும்.

கோயில்கள்

மேலும் காண்க

  • சிவன்
  • சைவ சமயம்
    Remove ads
    Loading related searches...

    Wikiwand - on

    Seamless Wikipedia browsing. On steroids.

    Remove ads