மஞ்சக்குடி
திருவாரூர் மாவட்ட கிராமம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மஞ்சக்குடி (Manjakkudi) என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கரையில் உள்ள ஒரு கிராமமாகும். இக்கிராமம் குடவாசல் தாலுகாவின் கீழ் வருகிறது.[1]
Remove ads
கல்வி
திருவாரூர் மாவட்டம் முழுவதற்கும் மஞ்சக்குடி ஒரு கல்வி மையமாக உள்ளது. இந்தியாவில் மழலையர் பள்ளி முதல் முதுகலை படிப்பு வரை, ஆய்வறிஞர் நிலை உட்பட, கல்வி வசதிகள் உள்ள கிராமங்களில் இதுவும் ஒன்றாகும். இங்கு சுவாமி தயானந்த சரசுவதி கலை அறிவியல் கல்லூரி ஒன்று செயல்படுகிறது.[2]
வணிக செயல்முறை ஒப்பந்தம்
மஞ்சக்குடியில் விப்ரோநிறுவனத்தின் வணிக செயல்முறை ஒப்பந்த அடிப்படையில் ஒரு கல்விமையம் செயற்படுகிறது. விப்ரோ நிறுவனத்தைச் சேர்ந்த 50 பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.[3]
அரிசி வகைகள்
2013 ஆம் ஆண்டில் ஷீலா பாலாஜி இவ்வூரில் பழைய அரிசி வகைகளை மீட்கும் பொருட்டு விழா ஒன்றை ஏற்பாடு செய்தார். இவ்விழா விவசாயிகளை ஈர்த்தது. மேலும் இவ்விழா பழைய அரிசி வகைகளை மீண்டும் நடவு செய்யவும் வழிவகுத்தது.[4] அரிய அரிசி வகைகளைப் பாதுகாத்து வளர்ப்பதில் ஆற்றிய பணிக்காக ஷீலா பாலாஜிக்கு நாரி சக்தி புரஸ்கார் வழங்கப்பட்டது.[5] மஞ்சக்குடியின் வரைபடத்தை அடையாளமாகப் பயன்படுத்தி சென்னையில் அரிசி விற்கப்படுகிறது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads