குடவாசல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
குடவாயில் என்று சங்க காலத்தில் அழைக்கப்பட்ட குடவாசல் (Kodavasal), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்திலுள்ள, குடவாசல் வட்டம் மற்றும் குடவாசல் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடம் இடமும், ஒரு பேரூராட்சியும் ஆகும். இங்கு குடவாசல் கோணேசுவரர் கோயில் உள்ளது. இங்கு நூற்றாண்டு கடந்த அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. 2022 நூற்றாண்டு நிறைவு அடைந்தது .மேலும் பிரம்மாண்ட நூற்றாண்டு விழா 2025 இல் கொண்டாடப்பட்டது .
Remove ads
அமைவிடம்
குடவாசல் பேரூராட்சி, திருவாரூரிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே உள்ள தொடருந்து நிலையம், 10 கி.மீ. தொலைவில் உள்ள கொரடாச்சேரியில் உள்ளது. இதனைச் சுற்றிய நகரங்கள், நன்னிலம் 15 கி.மீ.; வலங்கைமான் 12 கி.மீ.; கும்பகோணம் 22 கி.மீ.; திருவாரூர் 18 கி.மீ. தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
15 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 92 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி நன்னிலம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3719 வீடுகளும், 14639 மக்கள்தொகையும் கொண்டது.[5] [6][7]
குடவாசல் கோணேசுவரர் கோயில்


சைவதிருமறை தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் மொத்தம் 276ல், காவிரியின் தென்கரையில் உள்ள 128 தலங்களில் 94வது திருத்தலமாக விளங்குவது குடவாசல். கோச் செங்கட் சோழன் கட்டிய மாடக்கோயில்களுள் மேற்கு நோக்கிய வாயிலைப் பெற்றுள்ளதால் குடவாயில் என்னும் பெயர் பெற்றதாகவும் ஓர் வரலாறு.
குடவாசலில் ஊரின் நடுவே அமைந்துள்ள இக்கோயிலின் இறைவரது திருப்பெயர் கோணேசுவரர். சூரியேசுவரர், தாலப்பியேசுவரர், பிருகுநாதர் என பல பெயர்களுமுண்டு. இறைவியாரது திருப்பெயர் பெரியநாயகி. மேற்கு நோக்கிய சந்நிதி அமைந்துள்ள இக் கோயில் புதுப் பொலிவுடன் காட்சியளிக்கின்றது. இக் கோயிலுக்கு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. மேற்புறத்தில் பஞ்ச மூர்த்திகள் உருவங்கள் வண்ணச்சுதையில் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. உள் நுழைந்ததும் செப்புக் கவசமிட்ட கொடிமரம், கொடிமரத்து விநாயகர் சந்நிதி, பலிபீடம், நந்தி உள்ளன. இடப்பால் பெரியநாயகி சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது.
Remove ads
புகழ்பெற்ற இவ்வூரினர்
- குடவாயிற் கீரத்தனார்
- மகாதேவன், தவிலிசைக்கலைஞர்
- குடவாயில் பாலசுப்பிரமணியன், கல்வெட்டு ஆய்வாளர்.
- ம. இராசேந்திரன், துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads