மஞ்சூரியா

வடகிழக்கு ஆசியாவின் புவியியல் மண்டலம் From Wikipedia, the free encyclopedia

மஞ்சூரியா
Remove ads

மஞ்சூரியா (Manchuria) சீனாவின் வடகிழக்கில் மஞ்சு மக்கள் வாழ்ந்த பகுதியாகும். தற்கால சீனாவின் வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள லியாவோனிங், சிலின் மற்றும் கெய்லோங்சியாங் எனும் மூன்று மாகாணங்களின் பகுதியே மஞ்சூரியா ஆகும். உருசியப் பேரரசு காலத்தில் கைப்பற்றப்பட்ட மஞ்சூரியாவின் சில பகுதிகளை தற்போதைய உருசியாவின் வசம் உள்ளது.[1]

Thumb
மஞ்சூரியா (செந்நிறம்)
Thumb
மஞ்சூரியாவின் அமைவிடம், ஆண்டு 1944

வரலாறு

துவக்கத்தில் மஞ்சூரியாவை பல சீன மன்னர்கள் ஆண்டனர். பின்னர் மஞ்சு மக்களின் ஜின் அரசகுலம் மஞ்சூரியாவை ஆண்டது. ஜின் அரசகுலத்தினர் சீனாவைக் கைப்பற்றி குயிங் அரசகுலத்தை நிறுவினர். குயிங் அரசகுலத்தின் வீழ்ச்சியின் போது உருசியப் பேரரசு, ஜப்பான் கடலின் ஓரத்தில் உள்ள மஞ்சூரியாவின் பகுதிகளை கைப்பற்றியது. பின்னர் மஞ்சூரியாவின் மஞ்சுகோ பகுதியை 1931-இல் சப்பானியர்கள் கைப்பற்றினர்.[2]

இரண்டாம் உலகப் போரின் முடிவில் மஞ்சுகோ பகுதியை சீனாவும், உருசியாவும் பிரித்துக் கொண்டனர்.

Remove ads

நிலவியல்

மஞ்சூரியா, சீனாவின் வடகிழக்கிலும்; உருசியாவின் தூரக் கிழக்கில் ஜப்பான் கடலை ஒட்டி அமைந்த பகுதியாகும். மஞ்சூரியாவின் நிலப்பரப்பு புல்வெளி மேய்ச்சல் நிலங்கள், மலைகள் மற்றும் பாலைவனங்களால் ஆனது. கோடைக் காலத்தில் அதிக வெப்பமும்; குளிர்காலத்தில் கடுங்குளிர் நிலை கொண்டது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads