சிலின் மாகாணம்

From Wikipedia, the free encyclopedia

சிலின் மாகாணம்
Remove ads

சிலின் அல்லது ஜிலின் (சீனம்: 吉林; பின்யின்: Jílín; postal: Kirin), மக்கள் சீனக் குடியரசில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இது சீனாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாகக் கிழக்கே வட கொரியாவும் உருசியாவும், வடக்கே கெய்லோங்சியாங் மாகாணமும், தெற்கே லியாவோனிங் மாகாணமும் மேற்கே உள் மங்கோலியாவும் உள்ளன.

விரைவான உண்மைகள் சிலின் மாகாணம் 吉林省, பெயர் transcription(s) ...
விரைவான உண்மைகள் சிலின் மாகாணம், சீனம் ...
விரைவான உண்மைகள்
Remove ads

வரலாறு

ஆதி காலத்தில் இப்பிரதேசம் சியான்பேய், கொரிய, மோகி மற்றூம் வுயு ஆகிய பல்வகைப்பட்ட மக்கள் வாழ்ந்த இடமாகும்[4].

புவியியல்

சிலின் மாகாணம் வடகிழக்கு சீனாவின் மத்திய பகுதியில் உள்ளது. இம்மாகாணத்தில் 136 வகையான இயற்கைக் கனிமப் படிவுகள் காணப்படுகின்றன. இங்கு பெருமளவிலான சீன மருத்துவத் தாவரங்களும் மூலிகைகளும் உள்ளன. இங்கு எண்ணெய், எரிவாயு, இரும்புத்தாது மற்றும் கனிமங்கள் அதிகளவில் கிடைக்கின்றன. இதன் நிலப்பரப்பு தென்மேற்குப் பிரதேசம் உயர்ந்ததாகவும் வடமேற்கு நோக்கித் தாழ்ந்து செல்வதாகவும் உள்ளது.

நிர்வாகப் பிரிவுகள்

இம்மாகாணம் 9 மேல்நிலை நிர்வாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை 60 கவுண்டி அலகுகளாகப் பிரிக்கப்பட்டு மேலும் 1006 நகர நிலை அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

அரசியல்

சீனாவின் ஏனைய பகுதிகளைப்போலவே இங்கும் இரு கட்சி அரசமைப்பைக் கொண்டுள்ளது. மாகாணத்தின் அதி உயர் அரச அதிகாரியாக மாகாண ஆளுநர் விளங்குகின்றார்.

பொருளாதாரம்

2011இல், சிலின் மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1053.1 பில்லியன் யுவான் ($167.1 பில்லியன் அமெரிக்க டொலர்) ஆகக் காணப்பட்டது. தனி நபர் வருமானம் 2009இல் 26,289 ரென்மின்பி ஆகக் காணப்பட்டது.

நெல், மக்காச்சோளம், சோளம் என்பன இதன் பிரதான விவசாய உற்பத்திப் பொருட்களாகும்.

மக்கட் பரம்பல்

இம்மாகாணத்தில் பெரும்பான்மையாக ஆன் சீனர்கள் வசிக்கின்றனர். மேலும் கொரியர்கள் (1.15 மில்லியன் மக்கள்), மஞ்சு இனக்குழு (1 மில்லியன் மக்கள்), மொங்கோல் இனக்குழு (1.7 இலட்சம் மக்கள்), ஊய் இனக்குழு (1.2 இலட்சம் மக்கள்) மற்றும் சிபே இன மக்கள் சிறுபான்மையினராக உள்ளனர்.

மேலதிகத் தகவல்கள் 2000ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இனப்பரம்பல், இனம் ...

இங்கு மக்கள் விடுதலை இராணுவ சேவையிலுள்ளோர் உள்ளடக்கப்படவில்லை.

மூலம்: Department of Population, Social, Science and Technology Statistics of the National Bureau of Statistics of China and Department of Economic Development of the State Ethnic Affairs Commission of China, eds. Tabulation on Nationalities of 2000 Population Census of China. 2 vols. Beijing: Nationalities Publishing House (民族出版社), 2003. (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 7-105-05425-5)

Remove ads

சுற்றுலா

கோகுர்யோ இராச்சியத்தின் தலைநகரங்களும் கல்லறைகளும் என அழைக்கப்படும் பிரதேசம் உலக பாரம்பரியக் களங்களுள் ஒன்றாக உள்ளது. பேக்து மலை, சொர்க்க வாவி என்பன புகழ்பெற்ற சுற்றுலா மையங்கள் ஆகும்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads