மணமேல்குடி ஜெகதீஸ்வரர் கோயில்
தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜெகதீஸ்வரர் கோயில் புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டம் மணமேற்குடி எனப்படும் மணமேல்குடியில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]
Remove ads
அமைவிடம்
அறந்தாங்கியிலிருந்து 30 கி.மீ. தொலைவில், கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ளது. பட்டுக்கோட்டை மற்றும் அறந்தாங்கியிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.[2]
இறைவன், இறைவி
இங்குள்ள இறைவன் ஜெகதீஸ்வரர், இறைவி ஜெகத்ரட்சகி ஆவார். கோயிலில் மகிழம்பூ மரம், அரச மரம், வில்வ மரம் ஆகிய மரங்கள் உள்ளன. சிவனுக்கு பிரதோஷ விழா சிறப்பாக இங்கு நடைபெறுகிறது. இங்கு வழிபடும்போது திருமணத்தடை நீங்கும் என்றும், குழந்தை வரம் கிட்டும் என்றும் கூறுகின்றனர்.[3] இங்கு குலச்சிறை நாயனார், திருஞானசம்பந்தர், நின்றசீர் நெடுமாறர், மங்கையர்க்கரசியார் ஆகியோர் தனிச் சன்னதிகளில் கொடிக் கம்பத்திற்கு அருகில் உள்ளனர்.[4]
Remove ads
சிறப்பு
63 நாயன்மார்களில் ஒருவரான குலச்சிறை நாயனாரால் பூசிக்கப்பெற்ற வகையில் இத்தலம் பெருமை பெற்றதாகும்.[2]
திறந்திருக்கும் நேரம்
காலசந்தி (காலை 9.00 மணி), உச்சிக்காலம் (நடுப்பகல் 12.00 மணி), சாயரட்சை (மாலை 6.00 மணி), அர்த்தசாமம் (இரவு 8.00 மணி) என்ற வகையில் நான்கு கால பூசைகள் இங்கு நடத்தப்பெறுகின்றன.இக்கோயில் காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 4.30 முதல் 8.30 வரையிலும் திறந்திருக்கும்.[2]
மேற்கோள்கள்
இவற்றையும் பார்க்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads